Hamas Leader Killed: இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹமாஸ் அமைப்பின் தலைவர் பலி; தொடரும் யுத்தம்.!

போரின் தொடக்கத்தில் கொடூர கொலைகளை சந்தித்த இஸ்ரேல், தற்போது அதற்கு பழிதீர்க்கும் வகையில் செயல்படுகிறது.

Hamas leader Saleh Al-Arouri (Photo Credit: @TheInsidePaper X)

டிசம்பர் 03, பெய்ரூட் (World News): வரலாற்றில் அழிக்கப்பட்ட தங்களது தாய்நாடினை மீட்கப்போவதாக, மத்திய கிழக்கில் உள்ள சில நாடுகளின் ஒத்துழைப்பை பெற்று பாலஸ்தீனியத்தை சார்ந்த ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் நாட்டுக்கு (Israel Palestine War) எதிராக தனது போர் அறிவிப்பை வெளியிட்டு, திடீரென தாக்குதலை முன்னெடுத்தது. அடுத்தடுத்து ஐந்தாயிரம் ஏவுகணைகளை வீசிய பாலஸ்தீனிய ஹமாஸ் குழுவினர், தொடர்ந்து தங்களது தாக்குதலை சில நாட்கள் கொடூரமான வகையில் தீவிரப்படுத்தினர்.

கொடூர கொலைகள், கற்பழிப்பு குற்றங்கள்: இஸ்ரேல் நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, எல்லை பகுதியை ஒட்டியுள்ள வீடுகளுக்குள் புகுந்து, இஸ்ரேலிய பொதுமக்களை கொடூரமாக கொலை செய்தனர். உடலில் இருந்து தலையை வெட்டி வீட்டிற்குள் வைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு செல்வதும், பெண்களை பலாத்காரம் செய்து கொல்வதும், பிணைக் கைதியாக பிடித்து செல்வதும் என சர்ச்சை செயல்களை மேற்கொண்டிருந்தனர். இதனிடையே அறிவிக்கப்படாத போரால் முதலில் இழப்புகளை சந்தித்தாலும், அதிரடியாக களமிறங்கிய இஸ்ரேல் அமெரிக்காவின் ஆதரவுடன் களத்தில் தனது தாக்குதலை முன்னெடுத்தது.

காசாவில் தொடரும் தாக்குதல்: தற்போது வரை காசா நகருக்குள் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், பயங்கரவாதிகளுடன் அப்பாவி பொதுமக்களும் சேர்ந்து பலியாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இருதரப்பு போரினால் இன்று வரை இஸ்ரேல் தரப்பில் 1500 பொதுமக்கள் உயிரிழந்திருப்பினும், பாலஸ்தீனியத்தின் தரப்பில் பலி எண்ணிக்கையானது 21,000-ஐ கடந்து இருக்கிறது. இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஏராளம். Rajinikanth Invited To Ram Temple Inauguration: ராமர் கோயில் கும்பாபிஷேகம்… சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அழைப்பு..!

Israel Army Spot on Palestine Border, Near Gaza Strip (Photo Credit: @ANI X)

உலக நாடுகளின் உதவி: தாங்கள் பாதுகாக்க வேண்டிய மக்களுக்கு தீங்கு இழைத்துவிட்ட ஹமாசின் முடிவு, உலக அளவில் முதலில் எதிர்க்கப்பட்டாலும் பின் பாலஸ்தீனிய மக்களின் கதறலால் பல நாடுகளும் தற்போது அங்குள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை செய்து வருகிறது. தொடர்ந்து இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனியத்தில் முகாமிட்டு, வீடு-வீடாக சோதனை நடத்தி தாக்குதலையும் முன்னெடுத்துள்ளது.

ஹமாஸை ஒழிக்காமல் நாங்கள் ஓயோம்: இஸ்ரேல் நாட்டின் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒட்டுமொத்தமாக ஒழிக்காமல் எங்களது இராணுவ முயற்சிகள் நிறுத்தப்படாது என திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இதனால் பயங்கரவாதிகளை குறி வைத்து பல்முனை தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இரவு ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவர் தனது பாதுகாப்பாளர்களுடன் சேர்ந்து இராணுவ தாக்குதலில் பலியாகி இருக்கிறார்.

ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் பலி: பெய்ரூட் நாட்டில் உள்ள தகியேக் (Dahiyeh) நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித்தாக்குதலில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சாலெஹ் அல்-அரூரி (Saleh Al-Arouri) கொல்லப்பட்டுள்ளார். இந்த தகவலை ஹமாஸின் ஆதரவு தொலைகாட்சி ஊடகம், பெய்ரூட் தரப்புகள் உறுதி செய்துள்ளன.