Hamas Killed Children: வீடுவீடாக தலை துண்டிக்கப்பட்ட சடலங்கள் - ஹமாஸ் பயங்கரவாதிகளின் வெறியாட்டத்தில் 40 குழந்தைகள் கொடூர கொலை.!
குறிப்பிட்ட மதத்தின் வேத என்ற முழக்கத்துடன் பச்சிளம் குழந்தைகள் முதல் பெண்கள், அப்பாவி மனிதர்களை கொலை செய்து வெறியாட்டம் நடத்தும் ஹமாஸ் பயங்கரவாதிகளின் செயல் உலக நாடுகளை பதைபதைக்க வைத்துள்ளது.
அக்டோபர் 11, இஸ்ரேல் (Israel): கடந்த சில நாட்களுக்கு முன்பு காசா (Gaza Trip) எல்லையில் இருந்து 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலுக்கு (Israel) எதிராக ஏவி, ஹமாஸ் பயங்கரவாதிகள் (Hamas) இஸ்ரேலை எதிர்த்து போர் அறிவிப்பை வெளியிட்டு திடீர் தாக்குதலை மேற்கொண்டனர். இதனையடுத்து, களத்தில் இறங்கிய இஸ்ரேல், பாலஸ்தீனியத்தின் (Palestine) காசா நகரில் உள்ள பொதுமக்கள் வெளியேறிவிட அறிவுறுத்தி, போர் அறிவிப்பை உறுதி செய்தது.
இஸ்ரேலிய படைகள் காசா நகருக்குள் குண்டு மழையை பொழிந்தது. எல்லைதாண்டி ஊடுருவி வந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் குழு, இஸ்ரேலிய மக்களை பிணையக்கைதியாக பிடித்து வருகிறது. வீடு வீடாக சென்று மக்களை கொன்று குவித்து வேட்டையாடி வருகிறது. தற்போது வரை போரில் இருதரப்பிலும் 3000 பேர் உயிரிழந்துள்ளனர். 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்து இருக்கின்றனர். Nagapattinam: பேரனுக்கு ரூ.30 கோடி சொத்தை எழுதிவைத்த பெற்றோர்: தாய்-தந்தையின் நிம்மதியை சீர்குலைக்கும் மகள்.!
இந்நிலையில், இஸ்ரேலிய படையினர் தரைவழியாக மக்களுக்கு பாதுகாப்பை வழங்கி உறுதி செய்து வரும் நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் வந்துசென்ற இடத்தில், அப்பாவி பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். வீடுகளில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த பதைபதைப்பு கொடூரத்தை நேரில் கண்ட இராணுவ வீரர்கள் விவரிக்க வார்த்தையின்றி தங்களின் மனநிலையை வெளிப்படுத்துகின்றனர். இதற்கிடையில், தெற்கு இஸ்ரேலில் காசா எல்லைக்கு அருகில் இருக்கும் Kfar Aza kibbutz பகுதியில் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலிய மக்களின் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
அதேபோல, 40 குழந்தைகளை ஈவு இரக்கமின்றி தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். நிகழ்விடத்தில் அதிகாரிகள் முகாமிட்டு இருக்கின்றனர்.