Israel-Lebanon War: லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்.. நாடு முழுவதும் பெரும் பரபரப்பு..!
லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றது.
செப்டம்பர் 19, பெய்ரூத் (World News): காசாவில் ஹமாஸ் அமைப்பினரை (Hamas) அழிக்கும் நோக்கில் இஸ்ரேல் (Israel) ராணுவம் செயல்பட்டு வருகின்றது. இதற்கு இடையூறாக அண்டை நாடான லெபனானை (Lebanon) சேர்ந்த ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பினர் இருந்து வருகின்றனர். ஹமாசுக்கு ஆதரவாக தினந்தோறும் இஸ்ரேலை ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்துகின்றனர். Drone Attack: ரஷ்யா- உக்ரைன் போர்.. முக்கிய பகுதிகளில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்.!
இதனால் இஸ்ரேலும் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில், யாரு எதிர்பாராத வகையில் லெபனானில் பயன்பாட்டில் உள்ள பேஜர்கள் வெடித்து பெரும் உயிர்சேதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் பின்னணியில் இஸ்ரேல் இருக்கலாம் என கூறப்பட்ட சூழலில், தற்போது பேஜர்களை (Pager Blast) தொடர்ந்து வாக்கி டாக்கிகளும் பல்வேறு இடங்களில் வெடித்து சிதறின.
இதில், தற்போது வரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக குற்றச்சாட்டு எழும் நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை (Air Strike) நடத்தியுள்ளது. லெபனானின் தெற்கு பகுதியில் ஹிஸ்புல்லா கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் இந்த வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு நிலவு வருகிறது.
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: