Israel Airstrike on Gaza: 4 பேருக்காக 200 பேரை கொன்று குவித்த இஸ்ரேல்? வெளியான அதிர்ச்சி தகவல்.. பகீர் விபரம் உள்ளே.!

கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி போரை தொடங்கி வைத்த ஹமாஸ், இன்று தன்னை காப்பாற்றிக்கொள்ள இயலாமல் பரிதவித்து வருகிறது. உலக நாடுகள் பாலஸ்தீனிய நாட்டுக்கு மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது.

Rescued Hostages (Photo Credit: @judeanceo X)

ஜூன் 09, டெல் அவிவ் (World News): கடந்த 2023ம் ஆண்டு அக். மாதம், பாலஸ்தீனியம் நாட்டை சேர்ந்த ஹமாஸ் குழுவினர், தங்களின் தாய் நிலத்தை மீட்கப்போவதாக இஸ்ரேல் நாட்டுக்கு எதிராக போர்தொடுத்து சென்றது. எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி இஸ்ரேல் நாட்டிற்குள் ஏவுகணை தாக்குதல் நடத்தியவர்கள், கண்ணில் பட்டோரையெல்லாம் கொடூரமாக கொலை செய்தனர். மேலும், 250 நபர்களை பிணையக்கைதியாக பிடித்து சென்றனர். முதற்கட்டமாக ஹமாஸ் சார்பில் நடந்தபட்ட கொடூர தாக்குதலில் 1400க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

பல மாதமாக தொடரும் போர்: இதனையடுத்து, போரில் களமிறங்கிய இஸ்ரேல், ஹமாஸ் படையினரை ஒட்டுமொத்தமாக ஒழிக்காமல் நாங்கள் நாடுதிரும்ப மாட்டோம் என பாலஸ்தீனியத்தின் பல நகர்களில் தொடர் தாக்குதல் நடத்தப்படுகிறது. அதேவேளையில், பணயக்கைதிகளை தேடி மீட்டுகொண்டுவரும் பணியும் நடைபெறுகிறது. ஒருகட்டத்தில் போரின் தீவிரத்தை உணர்ந்த ஹமாஸ் குழுவினர், தாமாக முன்வந்து சில பணயக்கைதிகளை ஒப்படைத்தனர். அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததை தொடர்ந்து, போர் மீண்டும் நடைபெற தொடங்கியது. PM Narendra Modi Swearing Ceremony & Clash With IND Vs PAK: இந்தியா-பாகிஸ்தான் மோதல் மற்றும் பிரதமர் மோடி பதவியேற்பு விழா; இந்தியா வெற்றி பெறுமா..? ரசிகர்கள் எதிர்பார்ப்பு..! 

37 ஆயிரம் பேர் மொத்தமாக பலி: தற்போது வரை பாலஸ்தீனிய மண் வரலாற்றில் மீண்டு எழ இயலாத அளவு சேதப்படுத்தப்பட்டுள்ளது. பல கட்டிடங்கள் தொடர்ந்து வான்வழி தாக்குதலுக்கு இரையாகி வருகின்றன. ஹமாஸ் பயங்கரவாதிகளின் பெயரைச்சொல்லி ஐ.நா முகாம்களுக்கும் அருகில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. மொத்தமாக 37,171 பாலஸ்தீனிய மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஐ.நா மன்றம் & சர்வதேச நீதிமன்றம் போரை நிறுத்தக்கூறி அறிவுறுத்தியும் எந்த பலனும் இல்லை.

இதனிடையே, 4 பிணையக்கைதிகளை மீட்க இஸ்ரேல் இராணுவம் 200 பேரை கொன்று இருப்பது தெரியவந்துள்ளது. பாலஸ்தீனியத்தில் உள்ள மத்திய காசா, நுசேரட் மற்றும் அல்-அக்சா மருத்துவமனை பகுதியில் இருந்த 4 பிணைய கைதிகளை மீட்க மருத்துவமனை கட்டிடம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும், இந்த சம்பவத்தில் 200 பேர் உயிரிழந்ததும் தெரியவந்தது. மேலும், 400 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். பலரை கொன்று பிணைய கைதிகளாக நோவா அர்கமணி (வயது 25), மேயிர் ஜன் (வயது 21), ஆண்ட்ரீவ் கோஸ்க்ளோவ் (வயது 27), சலோமி ஜிவ் (வயது 40) ஆகியோர் மீட்கப்பட்டு இருக்கின்றனர். இந்த தகவலை பாலஸ்தீனியத்தின் ஹமாஸ் அமைப்பு மற்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement