Israel Under Attack: அப்பாவி மக்களின் வீட்டிற்குள் புகுந்து தொடரும் பயங்கரவாத தாக்குதல்: இஸ்ரேல்-பாலஸ்தீனிய பிரச்சனை விஸ்வரூபம்.. பதிலடியில் இஸ்ரேல் இராணுவம்.!

இஸ்ரேல் - பாலஸ்தீனிய பிரச்சனை, இஸ்ரேல் - அரபு எல்லைப்பிரிப்பு விஷயத்திலும் நிலஅபகரிப்பை சந்தித்து இன்று தீராத தலைவலியாக உருவாகி இருக்கிறது.

Israeli Palestinian War (Photo Credit: Twitter)

செப்டம்பர் 07, காசா (World News): இஸ்ரேல் - பாலஸ்தீனிய (Israeli–Palestinian Conflict) பிரச்சனை என்பது, இரண்டாம் உலகப்போர் நிறைவுபெற்ற பின்னரும், பல உள்நாட்டு பிரிவினைவாத எண்ணங்கள் காரணமாக இன்று வரை தீராத தலைவழிப் பிரச்சனையாக தொடர்ந்து வருகிறது.

மத்திய கிழக்கில் முக்கிய நாடாக இன்று இருக்கும் இஸ்ரேலில், பாலஸ்தீனிய பிரிவினைவாத எண்ணம் கொண்ட மக்களால் இஸ்ரேல் அரசு பெரும் தலைவலி பிரச்சனையை சந்தித்து வருகிறது. இது பல ஆண்டுகளாய் தொடருகிறது.

இவர்களில் ஆயுதமேந்திய போராட்டக்காரர்கள், தற்போது இஸ்ரேல் நாட்டில் தாக்குதலை முன்னெடுத்துள்ளனர். பாலஸ்தீனிய பயங்கரவாதிகள் இன்று அதிகாலை முதலாக இஸ்ரேலில் திடீர் தாக்குதலை முன்னெடுத்து இருக்கின்றனர்.

Israeli Palestinian War (Photo Credit: Twitter)

இதனால் அந்நாட்டில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. அப்பாவி மக்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். பாலஸ்தீனிய பயங்கரவாதிகள் இஸ்ரேல் மக்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதாகவும் உள்ளூர் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. TTF Vasan Driving License Cancelled: பைக் யூடியூபர் வாசனின் கைகளை கட்டிப்போட்ட உத்தரவு.. 10 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து.!

இந்த தாக்குதலை இஸ்ரேலிய அரசு முதலில் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பல ஏவுகணை தாக்குதல்களையும் எதிர்கொண்டது. இதனையடுத்து, இஸ்ரேலிய அரசும் போரை கையில் எடுத்துள்ள நிலையில், வான்வழி தாக்குதலை தனது தொழில்நுட்பம் மூலமாக நடுவழியில் தடுத்து அழிக்கிறது.

பாலஸ்தீனிய பயங்கரவாதிகளின் நிலைகள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. பதிலுக்கு பதில் தாக்குதல் நடத்தப்படுவதால், அங்கு போர் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இவ்விவகாரத்தில் விரைவில் உலக நாடுகளும் பயங்கரவாதத்தை ஒழிக்க ஒன்றிணைந்து களமிறங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.