Japan Earthquake: அதிர்ந்தது ஜப்பான்; குலுங்கிய கட்டிடங்கள்.. பயங்கர நிலநடுக்கம்., சுனாமி எச்சரிக்கை.!

ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகள் அளவில் பதிவான நிலநடுக்கமானது சுனாமி அச்சுறுத்தலை ஜப்பானை உருவாக்கி இருக்கிறது.

Japan Earthquake on 08 Aug 2024 (Photo Credit: @PlanetReportHQ X)

ஆகஸ்ட் 08, டோக்கியோ (World News): உலகளவில் பெரிய அளவிலான உயிரிழப்பு மற்றும் பொருள் சேதத்தை ஏற்படுத்தும் நிலநடுக்கம் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கம் 40 ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை பறித்தது. அதற்குப்பின், இந்தியா - பாகிஸ்தான் நாடுகளில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டு இருந்தது. Lithium-Ion Battery Explosion: செல்போனை கடித்து விளையாடிய நாய்; திடீரென வெடித்துச் சிதறியதால் பரபரப்பு..! பகீர் வீடியோ உள்ளே..! 

7.1 ரிக்டர் அளவுகோல் நிலநடுக்கம்:

இதனிடையே, அவ்வப்போது பசுபிக் ரிம் என அழைக்கப்படும் பசுபிக் நெருப்பு வளையத்தின் மீது அமைந்துள்ள இந்தோனேஷியா, தைவான், ஜப்பான் ஆகிய நாடுகளில் 6.5 புள்ளிகளை கடந்து நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜப்பான் நாட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மியாஸ்வாக்கி நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கமானது 6.9, 7.1 புள்ளிகள் அளவில் பதிவாகி இருக்கிறது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி (Tsunami Warning) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டிடங்களின் காட்சிகள்:

அச்சத்தின் உச்சத்தில் ஜப்பானிய மக்கள்: