Biden vs Trump Again For US President: அமெரிக்க அதிபர் தேர்தல்.. 70 ஆண்டுக்கு பின் நடக்கும் மறுபோட்டி.. பைடன், டிரம்ப் மோதல் உறுதி..!
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனும், டொனால்ட் ட்ரம்ப்பும் 2வது முறையாக நேருக்கு நேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
மார்ச் 14, வாஷிங்டன் (World News): அமெரிக்க அதிபர் தேர்தல் (US Presidential Election) இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தலில் மீண்டும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அதேபோல் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் (Joe Biden) மீண்டும் போட்டியிடவுள்ளார். இருவரும் இரண்டாவது முறையாக நேருக்கு நேர் களம் காணவிருப்பதால் அங்கே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 1956ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக அதிபர் தேர்தலில் இரு தலைவர்களின் மறுபோட்டி நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. Former Sri Lanka Cricketer Lahiru Thirimanne Hospitalized: விபத்தில் சிக்கிய முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்னே... ரசிகர்கள் சோகம்..!
இதையடுத்து இருவரும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இருவரும் ஒருவரை ஒருவர் நேரடி டி.வி விவாதத்திற்கு அழைப்பு விடுத்தது வருகிறார்கள். மேலும் கடுமையான சொற்களை பயன்படுத்தி விமர்சனம் செய்தும் வருகிறார்கள். வரும் நாட்களில் இதன் தீவிரம் மேலும் அதிகரிக்கும்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)