Bus Accident: 75 அடி ஆழ பள்ளத்தில் பாய்ந்து பேருந்து விபத்து; 27 பேர் துடிதுடிக்க மரணம்.!
குறைவான பேருந்துகளின் இயக்கத்தால் அதிக பயணிகள் பயணம் செய்த நிலையில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் பாய்ந்த பேருந்து பயங்கர விபத்தில் சிக்கியது.
ஜூலை 06, மெக்சிகோ (World News): மெக்சிகோ நாட்டில் உள்ள தெற்கு பகுதியில் இருக்கும் ஒக்சாகா (Oaxaca) மாகாணம், மிஸ்ட்க்கா பகுதியில் பயணிகள் பேருந்து சென்றுகொண்டு இருந்தது.
இந்த பயணிகள் பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 75 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் பாய்ந்து விபத்திற்குள்ளானது. இவ்விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 27 பேர் பரிதாபமாக பலியாகினர்.
20 பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புப்படை அதிகாரிகள், நிகழ்விடத்திற்கு விரைந்து காயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். Salaar Trending No 1: யூடியூபில் டிரெண்டிங் நம்பர் 1ல் சலார் டீசர்; கே.ஜி.எப் போல மாஸ் சம்பவம்.. தெறிக்கவிடும் ரசிகர்கள்.!
மேலும், பலியானோரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அங்குள்ள மலைக்கிராமத்தில் இருந்து மெக்சிகோவின் நகர பகுதிகளுக்கு செல்ல குறைந்தளவு பேருந்து வசதியே உள்ளதால் அதிக மக்கள் பயணம் செய்துள்ளனர். இதனால் பேருந்து வசதியை அதிகரிக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.