Pakistan Heat Wave Death: பாகிஸ்தானில் கடும் வெப்பம்; சுமார் 450-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு.. சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!
பாகிஸ்தானில் கடும் வெப்ப அலையால் இதுவரை சுமார் 450-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜூன் 28, கராச்சி (World News): பாகிஸ்தானில் உள்ள கராச்சி மற்றும் அண்டை பிராந்தியங்களில் கடும் வெப்பத்தால், சுமார் 450-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது ஒரு பேரழிவு தரும் வெப்ப அலை (Heat Wave) நிலவுகிறது. இது நாடு முழுவதும் உள்ள உயிர்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய இரண்டிலும் பெரும் பாதிப்பையும் அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில், வெப்பநிலை நீண்ட காலமாக 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் மூச்சுத்திணறல் ஈரப்பதத்துடன், அங்குள்ள மக்களால் தாங்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. IND Vs ENG Semi Final 2 Highlights: 10 வருடங்களுக்கு பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி; இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி..!
கடந்த ஜூன் 22-ஆம் தேதி முதல் தீவிர வானிலை நிலை நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த நான்கு நாட்களில் சுமார் 450 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், தற்போதுள்ள சுகாதார அமைப்புகளின் நிலைமை பாதிப்படைந்துள்ளது. மேலும், ஆயிரக்கணக்கானோர் வெப்ப சலனம் மற்றும் இதுசம்மந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், பெரும்பாலான நோயாளிகள் வயதானவர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதிக வெப்பநிலை காரணமாக நீரேற்றம் மற்றும் லேசான ஆடைகளை அணிவது அவசியம் என்றும் அந்நாட்டு சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.