Mpox Is Not The New COVID: "குரங்கு அம்மை நோயை கட்டுப்படுத்த முடியும்" உலக சுகாதார அமைப்பு அதிகாரி அறிவிப்பு..!
குரங்கு அம்மை நோயை கொரோனா தொற்றோடு ஒப்பிட முடியாது என உலக சுகாதார அமைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 21, சான் பிரான்சிஸ் (World News): உலக நாடுகளிடையே குரங்கு அம்மை (Mpox) பரவல் அதிகரித்து வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே சமீபகாலமாக தென்பட்ட இந்த நோய், தற்போது ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் இந்த பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க, விமான நிலையங்கள், எல்லைகளில் பயணிகளுக்கான பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. Airports On High Alert: குரங்கு அம்மை பாதிப்பு; சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்..!
இந்நிலையில் இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) அதிகாரி ஹன்ஸ் க்ளூஜ் கூறியதாவது, "நாம் ஒன்றாக இணைந்தால் குரங்கு அம்மை நோயை சமாளிக்க முடியும். நாம் குரங்கு அம்மை நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பின்பற்றி உலகெங்கும் இந்த நோய்ப் பரவலை முற்றாக அழிக்கப் போகிறோமா? அல்லது அச்சத்தின் சுழலில் சிக்கப் போகிறோமா? குரங்கு அம்மை நோயை கொரோனாவோடு ஒப்பிட இயலாது. ஏனெனில் இதனை கட்டுப்படுத்த முடியும். இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்வார்கள்’ என தெரிவித்துள்ளார்.