IPL Auction 2025 Live

Netherlands Sperm Scandal: 550 குழந்தைகளுக்கு தந்தையான நபர்; இனி அதை செய்ய கூடாது; நீதிமன்றம் எச்சரிக்கை.. நடந்தது என்ன?..!

குழந்தை பெற்றெடுக்க இயலாத தம்பதிகளுக்கு தொழில்நுட்ப வளர்ச்சியால் விந்தணு தானத்தின் மூலமாக அவ்வாய்ப்பு பூர்த்தி செய்யப்பட்டாலும், வரைமுறையின்றி செய்யப்படும் எச்செயலும் இயற்கைக்கு எதிரானவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Sperm (File Photo)

ஏப்ரல் 29, நெதர்லாந்து (World News): வடமேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நெதர்லாந்து (Netherland) நாட்டில் வசித்து வரும் ஜனாதன் (Jonathan M) என்பவர், கடந்த 2007ம் ஆண்டில் இருந்து விந்தணு தானம் செய்து கிட்டத்தட்ட 550 குழந்தைகளுக்கு தந்தையான நிகழ்வு சமீபத்தில் தெரியவந்து உலகளவில் பேசுபொருளானது.

நெதர்லாந்து நாட்டினை பொறுத்தமட்டில் விந்தணு (Netherland Sperm Scandal) தானம் என்பது சட்டபூர்வமான பரிசீலனைக்கு பின்னர் வழிகாட்டு நெறிமுறையோடு அனுமதிக்கப்படும் விஷயமாகும். அவைக்கான வரைமுறைகள் எளிதானது இல்லை என்பதாலும், அந்நாட்டு மக்களின் மாறிவரும் மனநிலை காரணமாகவும் அரசு அவற்றை ஊக்குவிப்பது இல்லை.

இதற்கிடையில், ஜனநாதன் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக செய்த விந்தணு தானத்தால் 550 குழந்தைகளுக்கு தந்தையான தகவல் தெரியவந்தது. இதனையடுத்து, சட்ட விதிமுறைகளை மீறியதாக ஜனாதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. Pichaikaran 2: நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிச்சைக்காரன் படத்தின் 2-ம் பாகம் டிரைலர் லிங்க் உள்ளே..! ரிலீஸ் தேதியும் அறிவிப்பு.!

வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் ஜனாதனனை கண்டித்ததோடு, மேற்படி இனி விந்து தானம் செய்ய நேரிட்டால் 1 இலட்சம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.90 கோடி) அபராதம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு விந்தனு தனத்திற்கு ரூ.90 கோடி அபராதம் செலுத்துவது மட்டுமல்லாது, தண்டனையும் அறிவிக்கப்படும் என்று எச்சரித்தனர்.

முன்னதாக மேற்படியான விவகாரத்தின் விசாரணையில் ஜனாதன் நெதர்லாந்தில் அளித்த விந்தணு தானத்தில் 100 குழந்தைகளும், பிற 450 குழந்தைகள் வெளிநாடுகளில் வளர்ந்து வருவதும் உறுதியாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த குழந்தையின் தாய் ஒருவர் தொடுத்த வழக்கில் மேற்படியான சம்பவம் அம்பலமானது.