Nobel Prize 2024: பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு.. வென்றது யார்? காரணம் என்ன?!

2024 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு டாரன் அசெமேக்லு, ஜேம்ஸ் ராபின்சன், சைமன் ஜான்சன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Nobel Prize 2024: பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு.. வென்றது யார்? காரணம் என்ன?!
Daron Acemoglu, Simon Johnson and James A. Robinson (Photo Credits: X/ @NobelPrize)

அக்டோபர் 14, ஸ்வீடன் (Technology News): கடந்த 1901ஆம் ஆண்டு முதல், இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு நோபல் பரிசு (Nobel Prize) வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்புகள் தற்போது வெளியாகி வருகின்றன.

நோபல் பரிசு: அதன்படி 2024ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் மைக்ரோ ஆர்.என்.ஏ.வின் கண்டுபிடிப்பு மற்றும் அதற்குப் பிந்தைய படியெடுத்தல் மரபணு ஒழுங்குமுறையில் அதன் பங்கு குறித்த ஆராய்ச்சிக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் ஜே. ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி ஈ (John J. Hopfield and Geoffrey E) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. வேதியியலுக்கான நோபல் பரிசு டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் எம். ஜம்பர் (David Baker, Demis Hassabis, and John Jumper) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. புரதம் வடிவமைப்பு, கட்டமைப்பு குறித்த ஆராய்ச்சிக்காக மூவருக்கும் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Israel Hamas War: இஸ்ரேல் – ஹமாஸ் போர்.. ஹிஸ்புல்லா அமைப்பின் திடீர் தாக்குதல்.!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு (South Korean Author) இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித வாழ்க்கை குறித்த கவிதைக்காக ஹான் காங்கிற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு (Nobel Peace Prize) ஜப்பானிய அமைப்பான நிஹான் ஹிடாங்கியோவுக்கு (Japanese organisation Nihon Hidankyo) வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு: இந்நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. டாரன் அசெமேக்லு, ஜேம்ஸ் ராபின்சன், சைமன் ஜான்சன் (Daron Acemoglu, Simon Johnson and James A. Robinson) ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் வளர்ச்சியில் நிறுவனங்களின் பங்கு பற்றிய ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டுள்ளது. பலவீனமான சட்டம் மற்றும் சுரண்டல் அதிகம் கொண்ட நாடுகள் பெரியளவில் வளர்ச்சியை அடையாது என்பதை அவர்களின் ஆய்வு நிரூபித்துள்ளது.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு:

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement