Pakistan Earthquake: பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு.!

துருக்கி-சிரியா நிலநடுக்கத்தை தொடர்ந்து, இந்தியா - ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் நாடுகளை மையமாக கொண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Pakistan Earthquake (Photo Credit: @ANI X)

நவம்பர் 12, பாகிஸ்தான் (World News): துருக்கி-சிரியாவை மையமாக வைத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 50 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலநடுக்கத்தை முன்னதாகவே நிலவியல் ஆய்வாளர் கண்காணித்திருந்த நிலையில், அரசு அதனை பெரிதாக எடுத்துக்கொள்வதை காரணத்தால் இறுதியில் பெரும் அழிவே மிஞ்சியது.

இதனையடுத்து, துருக்கி-சிரியா நிலநடுக்கத்தை தொடர்ந்து, இந்தியா - ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் நாடுகளை மையமாக கொண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் என அவர் எச்சரித்து இருந்தார். அதனை உறுதி செய்யும் பொருட்டு, கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 2 ஆயிரத்தை கடந்து உயிர்பலி ஏற்பட்டது. Siren Teaser: ஆக்சன்-திரில்லராக கலக்கும் ஜெயம்ரவி; சைரன் படத்தின் தெறிக்கும் டீசர் காட்சிகள் இதோ.! 

கடந்த வாரம் இமயமலை தொடர்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வந்த நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை 150-ஐ கடந்தது. நிலநடுக்கத்தின் தாக்கம் புதுடெல்லி, உத்திரபிரதேசம் மாநிலங்களையும் லேசாக உலுக்கியது.

நேற்று கிரீன்லாந்து நாட்டில், பூமிக்கடியில் இருக்கும் எரிமலை வெடித்து சிதறத் தொடங்கி 800 க்கும் மேற்பட்ட முறைகள் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று பாகிஸ்தானில் நிலநடுக்கம் 4.1 ரிக்டர் புள்ளிகள் அளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிய அளவிலான சேதங்கள் இல்லை எனினும், அபாயத்தின் முதல் அறிகுறியாக இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.