Police Constable & Son Shot Dead: பட்டப்பகலில் கொள்ளைக்கும்பல் துணிகர செயல்: தலைமை காவலர், காவலரின் மகன் குடும்பத்தினர் கண்முன் சுட்டுக்கொலை.!
இந்த அதிர்ச்சி சமப்வம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.
டிசம்பர் 18, இஸ்லாமாபாத் (World News): பாகிஸ்தான் நாட்டில் உள்ள இஸ்லாமாபாத், செக்டர் ஜி11 பகுதியில் (Islamabad Police Constable Killed) வசித்து வருபவர் முகம்மது அஷ்ரப். இவர் ரம்னா காவல் நிலையத்தில், தலைமை காவலராக வேலைபார்த்து வருகிறார். சமீபத்தில் இவர் திருட்டு செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தொடர்பான வழக்கு விவகாரத்தில், கொள்ளைக்கும்பலை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
குடும்பத்தினர் கண்முன் பயங்கரம்: இந்நிலையில், நேற்று காவலர் தனது வீட்டின் வெளியே நின்றுகொண்டு இருந்துள்ளார். அவரின் மனைவி, மகன், மகள் ஆகியோரும் உடன் இருந்துள்ளனர். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளைக்கும்பல், தலைமை காவலரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தது. அவரை காப்பாற்ற முயன்ற மகனும் துப்பாக்கி குண்டுகளை ஏந்தி மரணம் அடைந்தார்.
நடுரோட்டில் அதிர்ச்சி சம்பவம்: தலைமை காவலரின் மனைவி தனது கணவர் மற்றும் மகனை காப்பாற்றக்கூறி அலறியும் பலனில்லை. கொள்ளையர்கள் துப்பாக்கியுடன் வந்திருந்ததால், பலரும் செய்வதறியாது வேடிக்கை பார்த்தவாறு இருந்தனர். நடுரோட்டில் பதைபதைக்க வைக்கும் வகையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. TTE Slaps Passenger: பயணசீட்டு இன்றி பயணித்த சிறுமிக்கு கன்னத்தில் பளார் விட்ட டிடிஇ.. இரயில் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்.!
காவல்துறை விசாரணை: துப்பாக்கிசூடுக்கு பின் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சிகர சம்பவம், அப்பகுதி மக்களை பதறவைத்துள்ளது.
ஆப்கானிய அகதி கொலை: இதேபோல, மேற்கூறிய கொள்ளை கும்பலால் செக்டர் ஜி9/4-ல் ஆப்கானிய அகதி முசாவர் கான் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுதொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தெக்ரிக்-இ-பாகிஸ்தான்: பாகிஸ்தானை பொறுத்தமட்டில் தற்போது அங்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தை சேர்ந்த தெக்ரிக்-இ-பாகிஸ்தான் என்ற அந்நாட்டு அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பு, அரசுக்கு எதிரான ஆயுதமேந்திய போரை நடத்தி வருகிறது. இராணுவ அதிகாரிகளை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதலும் நடத்தப்படுகிறது.