TTE Slaps Passenger (Photo Credit: @priyarajputlive X)

டிசம்பர் 18, ரேபரேலி (Bareilly): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலி இரயில் நிலையத்தில், சம்பவத்தன்று பயணசீட்டு பரிசோதனை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது, இரயில் ஒன்றில் பயணம் செய்த சிறுமி, பயணசீட்டு இன்றி பயணித்ததாக தெரியவருகிறது.

சூழ்ந்துகொண்ட அதிகாரிகள்: இதனால் இரயிலில் பயணித்த சிறுமியை, இரயில் நடைமேடை எண் 5ல் நின்றதும் அவரை கீழே இறக்கி 3 அதிகாரிகள் சூழ்ந்துகொண்டு விசாரணை செய்தனர். மேற்படி அவரை இரயில்வே அலுவலகத்திற்காக அழைத்துசெல்ல முற்பட்டுள்ளனர். Flood Safety Tips: மழை பேரிடரில் சிக்கிட்டீங்களா? தற்காத்து கொள்வது எப்படி?..! 

பயணியான சிறுமிக்கு பளார்., பளாரென அடி: இதற்கு சிறுமி கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கவே, வாக்குவாதம் நடந்துள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பெண் பயணசீட்டு சோதனை அதிகாரி, சிறுமியை கன்னத்தில் பளார்., பளாரென தாக்கினார். இதனை மற்றொரு நடைமேடையில் இருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ வைரலாகவே, இரயில்வே அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.