Paramount Global Layoff: 800 பேரை வீட்டிற்கு அனுப்பியது பாராமவுண்ட் குளோபல் நிறுவனம்; தொலைக்காட்சி நிறுவனத்தின் அதிரடியால் பணியாளர்கள் வருத்தம்.!
தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆரம்பித்த பணிநீக்கம், தற்போது செய்தி நிறுவனங்கள் வரை தொடருகிறது.
பிப்ரவரி 14, சான் பிரான்சிஸ்கோ (World News): அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் செயல்பட்டு வரும் தொலைக்காட்சி மற்றும் இணையவழி ஊடக சேவை நிறுவனம் பாராமவுண்ட் குளோபல் (Paramount Global). இந்நிறுவனத்தின் அங்கமாக சிபிஎஸ் செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பாரமவுண்ட் குளோபல் நிறுவனம் பணிநீக்கம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, 800 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாராமவுண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அதிகாரி பாப் பக்கிஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 3% நபர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. எதிர்கால நடவடிக்கை மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சி, நிதி விஷயங்களை கருத்தில் கொண்டு பணிநீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Bullet Train India: 508 கி.மீ தூரத்தை 2 மணிநேரத்தில் கடக்க, யதார்த்தத்தை நெசவு செய்வோம் - இந்தியாவின் புல்லட் இரயில் அசத்தல் வீடியோ உள்ளே.!
அறிவிப்புக்கு பின் நடந்த அதிரடி: சர்வதேச அளவில் பணியாளர்களை வைத்து செயல்பட்டு வரும் சிபிஎஸ் நிறுவனம், கடந்த ஜனவரி 25ம் தேதியே பணியாளர்கள் மீது எடுக்கப்படவுள்ள பணிநீக்க நடவடிக்கை குறித்து தெரிவித்து இருந்தது. இந்நிறுவனத்தின் பிற அங்கமாக சிபிஎஸ் செய்திகள், பாராமவுண்ட் பிக்சர்ஸ், புளூட்டோ டிவி, பாராமவுண்ட் பிளஸ், நிக்லோடியன், பெட், காமெடி சென்ற ஆகிய தொலைக்காட்சி சேவைகளும் உள்ளன. உலகளவில் புகழ்பெற்ற செய்தி வாசிப்பாளர்கள் கேத்தரின் ஹெரிடேஜ், ஜெப் பெகுஸ், கிறிஸ்டினா ரபினி ஆகியோரும் பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த செய்தி அந்நிறுவன பணியாளர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.