PM Modi Attends East Asia Summit: கிழக்கு ஆசிய உச்சி மாநாடு.. இந்தியா-ஆசியான் உறவு குறித்து பேசிய பிரதமர் மோடி.!
உலகில் போர் பதற்றம் நிலவும் சூழலில், இந்தியா - ஆசியான் நாடுகளின் நட்புறவு மிக முக்கியம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
அக்டோபர் 11, வியன்டைன் (World News): தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு ‘ஆசியான்’ (ASEAN) என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பில் இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா, வியட்நாம், லாவோஸ், கம்போடியா, புருனே ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அதேபோல, கிழக்கு ஆசியா அமைப்பில் ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான் உட்பட 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த 2 அமைப்புகளின் உச்சி மாநாடுகள் (East Asia Summit) லாவோஸ் நாட்டின் தலைமையில் அந்நாட்டின் தலைநகர் வியன்டியேனில் (Vianden) நடைபெறுகிறது.
பிரதமர் மோடி பயணம்: இதில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு (PM Modi) லாவோஸ் பிரதமர் சோனெக்சே சிபன்டோன் அழைப்பு விடுத்தார். இதை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக லாவோஸ் சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடியை தலைநகர் வியன்டியேனில் அந்நாட்டுஉள்துறை அமைச்சர் விலய்வோங் பெளத்தகாம் வரவேற்றார். Pakistan Terrorist Attack: பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்; 20 பேர் உயிரிழப்பு.. 7 பேர் படுகாயம்..!
இதைத் தொடர்ந்து இந்தியா - ஆசியான் அமைப்பின் 21-வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது, "கிழக்கு ஆசிய கொள்கையை 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தேன். அது இந்தியா - ஆசியான் நாடுகள் இடையே புதிய சக்தி, உத்வேகம் மற்றும் வரலாற்று உறவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா - ஆசியான் நாடுகள் இடையே வர்த்தகம் 2 மடங்காக அதிகரித்து 130 பில்லியன் டாலரைதாண்டியுள்ளது. 21-ம் நூற்றாண்டு இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளின் நூற்றாண்டு. இந்தியாவிலிருந்து 7 ஆசியான் நாடுகளுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
போரையும், பதற்றத்தையும் உலகம் சந்தித்து வரும் சூழலில், இந்தியா - ஆசியான் நாடுகளின் நட்பு, ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தை, ஒத்துழைப்புக்கு மிக முக்கியம். கிழக்கு ஆசிய உச்சி மாநாடு இந்தியாவின் கிழக்குக் கொள்கையின் முக்கிய தூண். பிரச்சனைகளுக்கு போர்க்களத்தில் இருந்து தீர்வு கிடைக்காது. இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்." என்று கூறினார். மேலும் வியட்நாமில் யாகி புயல் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.