PM Modi's Poland Speech: "இந்தியா இந்த உலகத்தில் அமைதியை ஆதரிக்கும் நாடு" - போலந்தில் பிரதமர் மோடி உரை..!

பிரதமர் மோடி தனது 3 நாள் அரசு முறை பயணத்தின் முதல் கட்டமாக போலந்து நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.

PM Modi Poland Speech (Photo Credit: @NarendraModi X)

ஆகஸ்ட் 22, போலந்து (World News): கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் உக்ரைனும் பதிலடி கொடுத்து வரும் நிலையில், இரண்டு வருடங்கள் ஆகியும் போரின் (Ukraine-Russia War) தீவிரம் குறையவில்லை. இந்நிலையில், ரஷ்யாவின் எல்லைக்குள் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் உக்ரைன் படைகள் நுழைந்ததாக தகவல் வெளியானது. சமீபத்தில் ரஷ்யாவின் குர்ஸ் பிராந்தியத்தில் (Kursk region) அமைந்துள்ள சட்ஜா நகரை (Sudzha town) தனது படைகள் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவித்து இருந்தார்.

இதனிடையே, 3வது முறையாக பிரதமர் பொறுப்பேற்ற நரேந்திர மோடி, 2 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த மாதம் ரஷ்யா சென்றார். இந்த நிலையில், அரசுமுறை பயணமாக போலந்து (Poland) சென்றுள்ள பிரதமர் மோடிக்கு தலைநகர் வார்சாவில் நேற்று சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்குப் பிறகு 45 ஆண்டுகள் கழித்து போலந்து செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார். Airports On High Alert: குரங்கு அம்மை பாதிப்பு; சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்..!

பிரதமர் மோடி உரை: தொடர்ந்து போலந்து வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அங்கு அவர் பேசியதாவது, "இங்குள்ள இயற்கை காட்சிகளம், உங்களின் உற்சாகமும் மிகவும் அற்புதமாக இருந்தது. நீங்கள் இங்கு எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்தீர்கள். இதற்காக உங்கள் அனைவருக்கும் நான் நிச்சயம் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன். எந்த நாட்டில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும், முதலில் உதவி செய்யும் நாடு இந்தியாதான். கோவிட் வந்தபோது,​​இந்தியா தான் முதலில் மனிதநேயத்துடன் நடக்க வேண்டும் என்று கூறி அதன்படி செயல்பட்டது.

மற்ற நாடுகளின் குடிமக்களுக்கு இந்தியா உதவி வருகிறது. உக்ரைனில் போரினால் தாக்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு நீங்கள் பெரிய உதவி செய்தீர்கள். இன்று அதற்காக நான் உங்கள் அனைவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்தியாவில் வெறும் 2 ஆண்டுகளில் 5ஜி நெட்வொர்க்கை அனைத்து மாவட்டங்களிலும் சென்றடையச் செய்திருக்கிறோம். இந்தியாவில் நாங்கள் இப்போது,​​'மேட் இன் இந்தியா' மற்றும் 6ஜி நெட்வொர்க்கிற்காக வேலை செய்து வருகிறோம். 2023ம் ஆண்டில் உலக வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 16% க்கும் அதிகமாக இருந்துள்ளது. இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கு வெகு தொலைவில் இல்லை. நாம் உலகத்தையே ஒரே குடும்பமாக கருதுகிறோம் " இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு விஷயங்கள் குறித்து இந்திய வம்சாவளியினருடன் பேசினார்.