Thirukkural in Tok Pisin Language: டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி.!
உலகிற்கே பொதுமறையாக விளங்கும் திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்து பிரதமர் நரேந்திர மோடி, பப்புவா நியூ கினியா நாட்டின் பிரதமர் முன்னிலையில் வெளியிட்டார்.
மே 22 , பப்புவா நியூ கினியா (Papua New Guinea): ஜப்பான் (Japan) நாட்டில் நடைபெற்ற ஜி7 நாடுகள் (G7 Summit 2023) கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக சென்ற இந்திய பிரதமர் மோடி (Narendra Modi), உலக நாடுகளின் தலைவர்களிடையே உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து, அரசு முறை பயணமாக நேற்று பப்புவா நியூ கினியா (Papua New Guinea) நாடுகளுக்கு அவர் சென்றுள்ளார். நேற்று இரவு பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பாரம்பரிய நடனத்துடன் உற்சாக வரவேற்பு வாங்கப்பட்டது.
பப்புவா நியூ கினியாவின் பிரதமர் ஜேம்ஸ் மராப்பி (James Marape), இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கால்களில் விழுந்து ஆசி வாங்கி வரவேற்றார். அதனைத்தொடர்ந்து, அரசு ஆலோசனை கூட்டம் மற்றும் இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு (FIPIC Summit) கூட்டத்திலும் கலந்துகொண்டு உரையாற்றினார். அந்த கூட்டத்தில் 14 தீவுகளை சேர்ந்த தலைவர்களும் கலந்துகொண்டனர். G20 Tourist Group Meeting in JK: ஜம்மு காஷ்மீரில் ஜி20 சுற்றுலா குழு ஆலோசனைக்கூட்டம்; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!
இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "கொரோனா நோயின் தாக்கம் உலகளவில் தெற்கு நாடுகளில் அதிகளவு இருந்தது. பருவநிலை மாற்றம், இயற்கை பேரழிவு, பசி, வறுமை போன்ற பல சவால்களும் எழுந்தன. தற்போது புதிய பிரச்சனைகளும் எழுகிறது. இவ்வாறான காலத்தில் இந்தியா தனது நட்பு நாடுகளான பசுபிக் தீவு நாடுகளுக்கு ஆதரவாக நின்றுள்ளத்தில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றளவில் எரிபொருள், உணவு, உரம், மருந்து போன்ற விநியோக சங்கிலியால் இடையூறுகள் ஏற்படுகிறது. நாங்கள் நம்பியவர்கள் தேவைப்படும் நேரத்தில் எங்களுடன் இருப்பதில்லை. உங்களது (பப்புவா நியூ கினியா) வளர்ச்சியில் உறுதுணையாக இருப்பதில் இந்தியா பெருமை அடைகிறது. இந்தியாவை நீங்கள் நம்பலாம். எங்களின் அனுபவம் மற்றும் திறன்களை நாங்கள் தயக்கம் இன்றி பகிர்வோம். பலதரப்பை நம்பும், சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசுபிக் பகுதிகளை நாம் ஆதரிக்கிறோம். PM Modi at Papua New Guinea: பிரதமர் மோடியின் கால்களில் விழுந்து ஆசி வாங்கிய பப்புவா நாட்டு பிரதமர்; நெகிழ்ச்சி நிகழ்வு.!
உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ள கவலைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றை G20 மூலமாக உலகுக்கு தெரிவிப்பதில் இந்தியா முக்கிய பொறுப்பு வகுக்கிறது. G7 நாடுகள் உச்சி மாநாட்டிலும் 2 நாட்களாக நான் எடுத்த முயற்சி வெற்றியை தரும். என்னை பொறுத்தமட்டில் நீங்கள் பெரிய கடல் நாடுகள், சிறிய தீவுகள் கொண்ட மாநிலங்கள் இல்லை" என பேசினார்.
அதனைத்தொடர்ந்து உரையாற்றிய பப்புவா நியூ கினியா நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப்பி, "உலகளாவிய பல்வேறு பிரச்சனைகளுக்கு நாங்கள் பலியாகி இருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச அளவில் தெற்கு பகுதிகளின் தலைவராக இருக்கிறார். உலகளாவிய மன்றத்தில் இந்தியாவின் பின்னால் நாங்கள் என்றும் அணிதிரள்வோம். நாம் அனைவரும் வரலாற்று தொடர்பு கொண்டவர்கள். காலனித்துவப்படுத்தப்பட்ட வரலாறு கொண்ட நம்மில், நீங்கள் (இந்தியா) உலக நாடுகளை இன்று வழிநடத்துகிறீர்கள். எங்களுக்காக குரல் கொடுப்பதற்கு நன்றி" என பேசினார்.
இந்த பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி டோக் பிசின் (Tok Pisin Language) மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட திருக்குறள் புத்தகத்தை பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மொரப்பி முன்னிலையில் வெளியிட்டு, அவருக்கும் அதன் பாதிப்பை வழங்கினார். உலகப்பொதுமறையாக கருதப்படும் திருக்குறள், உலகில் உள்ள ஒவ்வொரு மொழியிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டும் என்பதே தமிழின் அங்கீகாரம்..