Norway Chess 2024: செஸ் போட்டியில் புதிய சரித்திர சாதனை; நம்பர் 1ஐ தொடர்ந்து நம்பர் 2-வையும் தோற்கடித்த பிரக்யானந்தா.!

உலகளவில் கவனிக்கப்படும் பிரக்யானந்தா தொடர்ந்து பல வெற்றிகளை படைத்தது இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்து வருகிறார்.

R Praggnanandhaa (Photo Credit: @ANI_Digital X)

ஜூன் 02, ஸ்டாவாங்கர் (Sports News): நார்வே நாட்டில் நடைபெற்று வரும் செஸ் போட்டியில், கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த போட்டியில் இந்திய இளம் வீரர் பிரக்யானந்தா (), உலகின் நம்பர் 1 செஸ் பிளேயரான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்தார். அதனைத்தொடர்ந்து, நேற்று இரவு நடந்த ஆட்டத்தில், அவர் உலகிலேயே நம்பர் 2 பிளேயரான பேபியானா கருவானாவை எதிர்கொண்டார். கிளாசிக்கல் செஸ் (Classical Chess) போட்டியில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பிரக்யானந்தா, உலகின் இரண்டாவது சிறந்த வீரராக கருதப்பட்ட கருவானாவை தோற்கடித்தார். Raveena Tandon Attacked: விபத்தை ஏற்படுத்திய நடிகையின் கார்; ரவுண்டு கட்டி வெளுத்த மக்கள்.. கதறிய நடிகை.! 

வெற்றிக்கு படிக்கட்டாக அமைந்த தோல்வி: அடுத்தடுத்த வெற்றிகள் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தரவரிசை பட்டியலில் ப்ரக்யானந்தாவை முதல் 10 இடங்களுக்குள் கொண்டு வந்துள்ளது. செஸ் போட்டியில் சர்வதேச அளவில் கவனம் பெற்று வரும் ப்ரக்யானந்தாவின் வளர்ச்சி, பல நாடுகளால் பாராட்டப்பட்டு வருகிறது. 18 வயதாகும் ப்ரக்யானந்தா கடந்த ஆண்டு பிடே செஸ் உலக கோப்பை போட்டியில் கார்ல்சனை எதிர்த்து தோற்றாலும், தற்போது அவரின் வெற்றி தொடர் பயிற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

ராஜநடையுடன் ப்ரக்யானந்தா: