North Korea Russia Oil Export: 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் வடகொரியாவுக்கு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வழங்கிய ரஷியா..!

கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் ரஷியா வடகொரியாவுக்கு நேரடி உதவி செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

National Flag of Russia & North Korea (Photo Credit: Pixabay)

ஜூன் 13, ப்யோங்கியாங் (Pyongyang, North Korea): வடகொரியா சர்வதேச அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறி மேற்கொண்ட சோதனையின் விளைவாக, அமெரிக்கா அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடையை விதித்தது. இதனால் உலக நாடுகளுடன் வடகொரியாவுக்கு எவ்வித தொடர்பும் இல்லாத வகையில் சர்வதேச நாடுகள் ஒன்று சேர்ந்து ஓரம் கட்டின.

தனது இலக்கான அணு ஆயுத விவகாரத்தில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாத வடகொரிய அரசு, அமெரிக்காவை பழி வாங்கிட வேண்டும் என்ற முடிவோடு தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அந்நாட்டின் மீதான பொருளாதார தடை என்பது அமெரிக்காவால் நீக்கப்படாமல், அந்நாட்டு மக்கள் கடும் துன்பத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

வடகொரியாவுக்கு நேரடியாக உலக நாடுகள் உதவி செய்யவில்லை என்றாலும், சீனா உட்பட சில நாடுகள் திரை மறைவில் வடகொரியாவுக்கு ஆதராகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் செயல்படுகிறது. சில விஷயங்கள் அவற்றில் வெளிப்படையாக உதவி செய்யப்படுகின்றன. Bangalore Shocker: 70 வயது தாயை கொன்று, சூகேட்ஸில் காவல் நிலையத்திற்கு உடலை எடுத்து சென்ற மகள்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

ரஷியா உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்து சென்றதையடுத்து, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் சேர்ந்து ரஷியாவை பொருளாதார ரீதியில் வலுவிழக்க தேவையான முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், ரஷியா தனது நட்பு நாடுகளுடன் சேர்ந்து தனது பொருளாதாரத்தின் நிலையை தொடர்ந்து தப்பிக்க வைக்கிறது.

இந்த நிலையில், ரஷியா வடகொரியா நாட்டுக்கு கடந்த டிசம்பர் 2022 முதல் ஏப்ரல் மாதம் 2023-க்குள் 67,300 பேரல் சுத்திகரிக்கப்பட்ட எரிவாயு எண்ணெய்களை வழங்கி இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் ரஷியா வடகொரியாவுக்கு நேரடி உதவி செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

அணு ஆயுத சோதனை மற்றும் அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக ஐ.நா கவுன்சில் உறுப்பு நாடுகள் வடகொரியாவுக்கு எவ்வித உதவியும் செய்யக்கூடாது என நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில், அந்த தடை விதிக்கப்பட்ட 2 ஆண்டுகளுக்கு பின், அமெரிக்காவுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து ரஷியா தனது எண்ணெய் விநியோகத்தை வடகொரியாவுக்கு வழங்கி இருக்கிறது.