Russia-Ukraine War: ரஷ்யா- உக்ரைன் போர்.. உக்ரைன் பயன்படுத்தும் அமெரிக்காவின் போர் விமானம்!
ரஷ்யாவின் Su-34 ரக போர் விமானத்தை உக்ரைனிய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
அக்டோபர் 16, பாம்பு தீவு (World News): கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் உக்ரைனும் பதிலடி கொடுத்து வரும் நிலையில், இரண்டு வருடங்கள் ஆகியும் போரின் (Ukraine-Russia War) தீவிரம் குறையவில்லை. இந்நிலையில், ரஷ்யாவின் எல்லைக்குள் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் உக்ரைன் படைகள் நுழைந்ததாக தகவல் வெளியானது.
ரஷ்யா- உக்ரைன் போர்: ரஷ்யாவின் குர்ஸ் பிராந்தியத்தில் (Kursk region) அமைந்துள்ள சட்ஜா நகரை (Sudzha town) தனது படைகள் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவித்து இருந்தார். இதனிடையே, உக்ரைனின் மத்திய பகுதியைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் போர் வீரர்கள் உள்பட 51 பேர் பலியாகினர். 270-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். Indian Man Jailed In Singapore: தவறாக அனுப்பிய பணத்தை திருப்பித் தராத இந்தியர்.. 9 வார சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு..!
ட்ரோன் தாக்குதல்: சமீபத்தில், மாஸ்கோ மற்றும் ரஷ்யாவின் டொரோபெட்ஸில் உள்ள இராணுவ தளத்தின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து 200-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதலை நடத்தியது. மேலும் கருங்கடலில் உள்ள பாம்பு தீவு அருகே ரஷ்ய ராணுவத்துடன் உக்ரேனியப் படைகள் கடுமையான மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில ரஷ்யாவின் Su-34 ரக போர் விமானத்தை உக்ரைனிய வான் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதற்கு உக்ரைனிய வான் பாதுகாப்பு படை அமெரிக்காவின் US F-16 போர் விமானத்தை பயன்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. US F-16 போர் விமானம் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டால், மேற்கத்திய நாடுகளின் கூட்டாளிகளால் வழங்கப்பட்ட விமானத்தின் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்ட முதல் ரஷ்ய போர் விமானம் இதுவாகும்.