Putin Condoles Wayanad Landslide Deaths: வயநாடு நிலச்சரிவு மரணங்கள்; ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல்.!
இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக இருக்கும் ரஷியா, கேரளாவில் நடந்த பெருந்துயரத்திற்கு தனது இரங்கலை பதிவு செய்து இருக்கிறது.
ஆகஸ்ட் 01, வயநாடு (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டம் (Wayanad), சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் முண்டக்கை உட்பட 4 மலைக்கிராமங்கள் முழுவதுமாக மண்ணில் புதையுண்டன. தொடர்ந்து 4 நாட்களாக அப்பகுதியில் பெய்து வந்த தென்மேற்குப்பருவமழையின் தீவிரம் காரணமாக, மண்ணில் தளர்ச்சி ஏற்பட்டு நிலம் சரிந்து பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதி என 13 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்திருந்தபோதிலும், ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் போன்றவை அமைக்கப்பட்டு நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. தற்போது மீட்புப்பணிகளில் முப்படைகளும் ஈடுபட்டு வருகின்றனர். Cancer in India: புற்றுநோய்க்கு காரணமாகும் பழக்கங்கள்; இந்தியாவில் தலை, கழுத்து புற்றுநோய் அதிகரிப்பு.!
கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை:
மழை-வெள்ளம், நிலச்சரிவு காரணமாக தற்போது வரை 270 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் சடலமும் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. பல சடலங்கள் மண்ணில் புதையுண்டு இருக்கின்றன. தற்போது வரை 200 பேரின் விபரங்கள் குறித்த எந்த தகவலும் இல்லாததால், அவர்களும் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்திய அளவில் மிகப்பெரிய நிலச்சரிவாக வயநாடு நிலச்சரிவு சோகம் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு 80 பேரின் உயிரை பறித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
ரஷிய அதிபர் இரங்கல்:
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு மீட்கப்பட்ட 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உதவிகளை மாநில அரசும், தொண்டு நிறுவனங்களும் செய்து வருகின்றன. இதனிடையே, வயநாடு நிலச்சரிவு குறித்து தகவல் அறிந்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், "கேரளாவில் உள்ள வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் துயரமான விளைவுகளுக்கு இரங்கலை தெரிவிக்கிறேன். இறந்தவர்களின் நெருங்கிய & அன்பானவர்களுக்கு அனுதாபதம் மற்றும் ஆதரவை தெரிவிகிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமாகி வீடுதிரும்ப வாழ்த்துகிறேன்" என இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.