IPL Auction 2025 Live

Vladimir Putin Congratulatory: இந்தியாவின் வெற்றியை உளமார மகிழ்ந்து வாழ்த்திய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்; மேலும் சாதனை படைக்க கோரிக்கை.!

இதுதொடர்பாக அவர் குடியரசுத்தலைவர், பிரதமர், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அவர் தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.

Russian President Vladimir Putin | Chandrayaan 3 (Photo Credit: @ANI Twitter)

ஆகஸ்ட் 24, மாஸ்கோ (Moscow): நிலவு தொடர்பான ஆராய்ச்சியில் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு (ISRO) உலக நாடுகளிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

வேறெந்த உலக நாடுகளும் செல்லாத நிலவின் தென்துருவ பகுதியில் சந்திராயன் (Chandrayaan 3) விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறங்கி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய அதிகாரிகள் புதிய சரித்திர சாதனையை படைத்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன் 3 ராக்கெட், 40 நாட்கள் புவி மற்றும் நிலாவின் சுற்றுவட்ட பாதையில் பயணம் செய்து நிலவில் தரையிறங்கி இருக்கிறது. தொடர்ந்து அங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்நிலையில், இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான ரஷியா (Russia) தனது மனமார்ந்த வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin) இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு (Droupadi Murmu), பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), இஸ்ரோ (ISRO Scientist) பணியாளர்களுக்கு தனது வாழ்த்து செய்தியை தெரிவித்து இருக்கிறார். Rowdy Baby Surya: மீண்டும் சர்ச்சை செயலை தொடங்கிய ரௌடி பேபி சூர்யா; மதுரையில் பரபரப்பு புகார்.!

இதுகுறித்து விளாடிமிர் புதின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம், சந்திராயன் 3-ஐ நிலவின் தென்துருவதில் தரையிறக்கியுள்ளதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

விண்வெளி ஆராய்ச்சியில் இது மிகப்பெரிய படி ஆகும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியா முன்னேற்றமடைந்துள்ளதற்கு, இந்த சாதனை சிறந்த சான்று ஆகும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை மற்றும் பிற அனைத்து பணியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் பல புதிய சாதனைகளை படைக்கவும் எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்" என கூறியுள்ளார்.