IDF Approach Northern Gaza: ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க முழுவீச்சில் தரைவழி தேடுதல் வேட்டை; வடக்கு காசாவில் களமிறங்கிய இஸ்ரேலிய படைகள்.!
ஹமாஸ் பயங்கரவாதிகளை முழுவதுமாக ஒழித்துவிட்டு மட்டுமே நாங்கள் அமைதியாவோம் என்ற முடிவில் இஸ்ரேல் விடாப்பிடியாக இருக்கிறது.
அக்டோபர் 26, இஸ்ரேல் (World News): கடந்த 20 நாட்களுக்கு முன்பு, அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய ஹமாஸ் பயங்கரவாதிகள் - இஸ்ரேல் அரசு இடையிலான போர், தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இஸ்ரேலின் எல்லைப்பகுதியை உடைத்து ஜீவிஸ் மாகாணத்தில் வசித்து வரும் இஸ்ரேலிய மக்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் முதலில் கொடூரமாக கொலை செய்த நிலையில், பதில் தாக்குதல் மேற்கொண்ட இஸ்ரேலிய அரசு ஹமாஸ் பயங்கரவாதிகள் மற்றும் பாலஸ்தீனியத்தில் உள்ள மக்களை நோக்கி பல ஏவுகணைகளை செலுத்தியது.
இதன் விளைவாக 1400 பேரை பலிகொடுத்த இஸ்ரேல், பதில் நடவடிக்கை மூலமாக 6,546 பாலஸ்தீனிய மக்களை கொன்று குவித்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகளை முழுவதுமாக ஒழித்துவிட்டு மட்டுமே நாங்கள் அமைதியாவோம் என்ற முடிவில் இஸ்ரேல் விடாப்பிடியாக இருக்கிறது. Karnataka Accident: நின்று கொண்டிருந்த டிரக் மீது கனகர லாரி மோதி பயங்கர விபத்து; ட்ரக்கில் பயணித்த 12 பேர் பரிதாப பலி.!
இதனால் இஸ்ரேல் தொடர்ந்து பாலஸ்தீனியத்தின் காசா நகருக்குள் தாக்குதல் நடத்தி வருகிறது. தரைவழியாகவும் ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க இராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எல்லைப்பகுதி வழியாக மீண்டும் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் - பாலஸ்தீனிய எல்லையில், காஸாவின் வடக்கு பகுதியில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளின் நிலைகள் தாக்கி அழிக்கப்படுகின்றன. அங்கிருந்து இஸ்ரேலிய படைகள் தரைவழியாக முன்னேறி வருகின்றன.