Karnataka Accident Visual (Photo Credit: X)

அக்டோபர் 26, சிக்கபள்ளாபூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் - ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில், சிக்கபள்ளாபூர் பகுதியில் இன்று பயங்கர விபத்து ஏற்பட்டது.

கனரக லாரி மீது எஸ்யுவி கார் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த 12 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்று கொண்டிருந்த கனரக லாரி, திடீரென பிரேக் அடித்ததால் கார் லாரியின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

காரில் பயணித்த 10 ஆண்கள் உட்பட இரண்டு பெண்கள் என 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கோர்த்தலா பகுதியைச் சார்ந்தவர்கள் என்பதும் பெங்களூருவில் உள்ள கங்கசந்திரா பகுதியில் தங்கி இருந்து வேலை செய்து வந்ததும் உறுதியானது. NASA Captured Nebula & Star Cluster Galaxy: 2 இலட்சம் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள விண்மீன் திரள்களை காட்சிப்படுத்திய நாசா..! 

விபத்தில் பலியானோரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த லாரியின் மீது டிரக் அதிவேகமாக வந்து மோதியதே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் ஆந்திராவில் இருந்து பெங்களூர் நோக்கி வந்துகொண்டு இருக்கின்றனர். விபத்தை கண்ட உள்ளூர் மக்கள் முதலில் வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு இருக்கின்றனர். பின் மீட்பு படையினர் மற்றும் காவல் துறையினர் வந்துள்ளனர்.