World's Second Largest Diamond: உலகின் 2வது பெரிய வைரம்.. லுகாரா நிறுவனம் கண்டுபிடிப்பு..!
உலகின் இரண்டாவது பெரிய வைரம், தென்னாப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 23, போட்ஸ்வானா (World News): கனடாவைச் சேர்ந்த லுகாரா டைமண்ட் கர்ப் (Lucara Diamond Corp) நிறுவனத்தினால் போட்ஸ்வானா (Botswana) தலைநகர் கபரோனில் இருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கெய்ரோ சுரங்கத்தில் (Cairo Mine) 2492 காரட் வைரம் (Diamond) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Kamala Harris Speech: "நான் ஒரு நடுத்தர குடும்பப் பின்னணியில் இருந்து வருகிறேன்" - தேசிய மாநாட்டில் கமலா ஹாரிஸ்..!
கடந்த 1905-ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 3106 காரட் 'கல்லினன்' வைரத்திற்குப் பிறகு, இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் மிகப்பெரிய வைரம் இதுவாகும். இதற்கு முன்னர் 2019-ஆம் ஆண்டில், இதே சுரங்கத்தில் 1758 காரட் 'செவாலோ' வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரத்தை பிரான்ஸ் பேஷன் நிறுவனமான லூயிஸ் வுட்டன் (Louis Vuitton) வாங்கியது. ஆனால், அதன் விலை குறித்து வெளியில் அறிவிக்கவில்லை.
முன்னதாகவே 2017-ஆம் ஆண்டில், போட்ஸ்வானாவின் கெய்ரோ சுரங்கத்தில் 1,111 காரட் 'லெசிடி லா ரோனா' வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை ஒரு பிரிட்டிஷ் நகைக்கடைக்காரர் சுமார் ரூ.444 கோடிக்கு வாங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், போட்ஸ்வானா உலகின் மிகப்பெரிய வைர உற்பத்தியாளர்களில் ஒன்றாக உள்ளது. மேலும், உலகின் வைரத்தில் 20% இங்குதான் உற்பத்தி செய்யப்படுகின்றன.