Life Imprisonment For Serial Rapist: தொடர் கற்பழிப்பு குற்றவாளிக்கு 42 ஆண்டுகள் ஆயுள் தண்டனை.. உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

தென்னாப்பிரிக்காவில் தொடர் பலாத்கார குற்றவாளிக்கு 42 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

South African serial rapist (Photo Credit: @uuniversalmusic X)

அக்டோபர் 05, ஜோகன்னஸ்பர்க் (World News): தென்னாப்பிரிக்காவின் தொடர் கற்பழிப்பு குற்றவாளிக்கு (Serial Rapist) 42 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து ஜோகன்னஸ்பர்க் (Johannesburg) உயர் நீதிமன்றம் நேற்று (அக்டோபர் 04) தீர்ப்பளித்துள்ளது. நிக்கோசினாதி பகாதி (வயது 40) என்பவர் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை 90 பாலியல் பலாத்கார (Rape) சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். Brazil Drought: 122 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி.. அமேசான் நதி வற்றி பரிதவிக்கும் பிரேசில்..!

ஜோகன்னஸ்பர்க் நகருக்கு கிழக்கே உள்ள ஒரு நகராட்சியான எகுர்ஹுலேனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பகாதியால் (Nkosinathi Phakathi) பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பள்ளிக்குழந்தைகள் என்று தென்னாப்பிரிக்காவின் தேசிய வழக்கு ஆணையம் (NPA) தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பலர் வேலை அல்லது பள்ளிக்குச் செல்லும்போது, பகாதி அவர்களை பின்தொடர்ந்து, கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் சிலரை அவர்களின் சொந்த வீடுகளில் எலக்ட்ரீஷியன் (Electrician) போல் சென்று, அவர்களையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டபோது, காவல்துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்டதில் பகாதி தனது காலை இழந்தார். இந்நிலையில், அவருக்கு 42 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் இந்த 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை 9,300-க்கும் மேற்பட்ட கற்பழிப்புகள் நடந்துள்ளன. இது கடந்த ஆண்டை விட 0.6% அதிகம் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.