UN Chief About PM Modi's Ukraine Visit: பிரதமர் மோடி உக்ரைன் பயணம்.. போரின் முடிவுக்கு உதவும் என ஐநா நம்பிக்கை..!
பிரதமர் நரேந்திர மோடியின் உக்ரைன் பயணம் போரை முடிவுக்கு கொண்டு வர உதவும் என ஐநா பொதுச்செயலாளர் நம்புவதாக அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 23, கியூவ் (World News): கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் உக்ரைனும் பதிலடி கொடுத்து வரும் நிலையில், இரண்டு வருடங்கள் ஆகியும் போரின் (Ukraine-Russia War) தீவிரம் குறையவில்லை. இந்நிலையில், ரஷ்யாவின் எல்லைக்குள் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் உக்ரைன் படைகள் நுழைந்ததாக தகவல் வெளியானது. சமீபத்தில் ரஷ்யாவின் குர்ஸ் பிராந்தியத்தில் (Kursk region) அமைந்துள்ள சட்ஜா நகரை (Sudzha town) தனது படைகள் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவித்து இருந்தார்.
போலந்து பயணம்: இதனிடையே, 3வது முறையாக பிரதமர் பொறுப்பேற்ற நரேந்திர மோடி, 2 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த மாதம் ரஷ்யா சென்றார். இந்த நிலையில், அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி போலந்து (Poland) சென்றார். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்குப் பிறகு 45 ஆண்டுகள் கழித்து போலந்து செல்லும் முதல் பிரதமர் மோடி (PM Modi) ஆவார். அங்கு போலந்து வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். மேலும் போலந்து தலைநகர் வார்சாவில் அந்நாட்டு பிரதமர் டொனால்ட் டஸ்க்-கை சந்தித்து பேசினார். Controversial British YouTuber: இந்தியா மீது அணு ஆயுத மிரட்டல்.. வீடியோ வெளியிட்ட சர்ச்சைக்குரிய பிரிட்டிஷ் யூடியூபர்..!
உக்ரைன் பயணம்: தொடர்ந்து போலந்தில் இருந்து 'ரயில் ஃபோர்ஸ் ஒன்' ரயில் மூலம் பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்றார். ரஷ்யா உக்ரைன் போருக்கு மத்தியில் பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து ஐநா பொதுச்செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் (Stephane Dujarric) கூறியதாவது, "நாங்கள் பல நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்கள் இப்பகுதிக்கு பயணம் செய்வதைப் பார்த்திருக்கிறோம். இந்த வருகைகள் அனைத்தும் போரின் முடிவுக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஐநா பொதுச் சபை ரஷ்யாவின் படையெடுப்பை நிறுத்துவதற்கும், உக்ரைனின் உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை நிறுத்துவதற்கும் அழைப்பு விடுக்கும் பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது, இருப்பினும் இந்த தீர்மானங்களுக்கு வாக்களிப்பதில் இருந்து இந்தியா புறக்கணித்துள்ளது. உக்ரைன் செல்லும் பிரதமர் மோடி, அங்கு அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திக்கிறார். உக்ரைன் மோதல் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுடன் அவர் கடந்த மாதம் கலந்துரையாடிய ரஷ்ய பயணத்தைத் தொடர்ந்து இந்த பயணம் நடைபெறுகிறது.