Autograph from PM Modi: இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் போட்டிபோட்டு ஆட்டோகிராப் வாங்கி செல்பி எடுத்த அமெரிக்க காங்கிரசர்கள்.. இந்தியர்களுக்கே பெருமிதம்.!
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டுள்ளதை பல அறிவிப்புகள் அடுத்தடுத்து உறுதி செய்யும்.
ஜூன் 23, நியூயார்க் (NewYork): அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரின் மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பை ஏற்று, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு 3 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.
இந்த பயணத்தின் போது அமெரிக்காவில் செயல்பட்டு வரும் பெருநிறுவனங்களின் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து மேற்படி இந்தியாவில் புதிய முதலீடுகள் செய்வதை பற்றி கலந்தாலோசித்தனர்.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவரும், உலக செல்வந்தர்களில் முக்கியமானவருமாகிய எலான் மஸ்க் இந்திய பிரதமரை நேரில் சந்தித்து உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து, பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரதமர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் வெள்ளை மாளிகையில் கலந்தாலோசித்தார்.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள அமெரிக்க காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மாநில உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த உரையின் முடிவில் அமெரிக்க காங்கிரசார் பிரதமர் மோடியிடம் ஆட்டோகிராப் வாங்கி, செல்பி எடுத்தனர். அதற்காக வரிசையில் நின்று காத்திருந்து இந்திய பிரதமரிடம் அனைத்தையும் பெற்றனர்.