US President Met with Chinese President: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் நேரில் சந்திப்பு..!
இந்த நிகழ்வுடன் நடைபெற்ற ஏபிஇசி கூட்டத்தில் சீன - அமெரிக்க அதிபர்கள் சந்தித்துக்கொண்டனர்.
நவம்பர் 17, லீமா (World News): மேற்கு தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில், சீனாவின் பங்களிப்புடன் சான்காய் (Chancay Port) நகரில் பிரம்மாண்டமான துறைமுகம் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் (President Xi Jinping) பெரு நாட்டுக்கு நேரில் சென்றிருந்த நிலையில், அவருக்கு அந்நாட்டு அரசு சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.
அமெரிக்கா-சீன அதிபர்கள் சந்திப்பு:
துறைமுகத்தை திறந்து வைத்து அந்நாட்டு அர்ப்பணித்த சீன அதிபர் ஜி ஜின்பிங், பெருவின் தலைநகர் லிமாவில் நடைபெற்ற ஏபிஇசி (APEC) கலந்தாய்வுக் கூட்டத்தில் அதிபர் ஜோ பைடனை நேரில் சந்தித்தார். இருவரும் பரஸ்பரம் வரவேற்று, கைகுலுக்கி கொண்டனர். பிராந்திய பாதுகாப்பு, இராணுவ நடவடிக்கை உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். Mike Tyson Vs Jake Paul: முன்னாள் சாம்பியன் மைக் டைசனை வீழ்த்தி ஜேக் பால் சாதனை.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
உறவை முன்னேற்ற முயற்சிகள்:
சீனா - அமெரிக்கா இடையேயான உறவு கடந்த 4 ஆண்டுகளாக ஏற்றத்தாழ்வில் இருக்கும் நிலையில், உறவை நிலையானதாக மாற்ற இருதரப்பும் ஆலோசனை மேற்கொண்டதாகவும், கடந்த 45 ஆண்டுகால நட்பை மேற்படி தொடர்ந்து எடுத்துச்செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சீன தரப்பில் இருந்து தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. தைவான், சீன பெருங்கடல் விவகாரத்தில் அமெரிக்கா - சீனா இடையே முரண்பட்ட கருத்துக்களால் பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டு, இரண்டு நாட்டின் உறவுகள் பாதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில், அந்நாட்டின் அதிபராக இரண்டாவது முறை டொனால்ட் ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனவரி மாதம் அவர் அந்நாட்டின் அதிபராக பொறுப்பேற்பார். அதுவரை இன்றைய அதிபர் ஜோ பைடன் தனது பணிகளை மேற்கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (President Joe Biden) நேரில் சந்தித்துக்கொண்ட காட்சிகள்:
பெருவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட துறைமுகம்: