Ajit Doval Meets Putin: ரஷ்யா- உக்ரைன் போர்.. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அஜித் தோவல் பேச்சுவார்த்தை..!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் நேற்று ஆலோசனை நடத்தினார்.
செப்டம்பர் 13, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் (World News): கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் உக்ரைனும் பதிலடி கொடுத்து வரும் நிலையில், இரண்டு வருடங்கள் ஆகியும் போரின் (Ukraine-Russia War) தீவிரம் குறையவில்லை. இந்நிலையில், ரஷ்யாவின் எல்லைக்குள் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் உக்ரைன் படைகள் நுழைந்ததாக தகவல் வெளியானது.
ரஷ்யா- உக்ரைன் போர்: சமீபத்தில் ரஷ்யாவின் குர்ஸ் பிராந்தியத்தில் (Kursk region) அமைந்துள்ள சட்ஜா நகரை (Sudzha town) தனது படைகள் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவித்து இருந்தார். இதனிடையே, உக்ரைனின் மத்திய பகுதியைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் போர் வீரர்கள் உள்பட 51 பேர் பலியாகினர். 270-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். Caterpillar: ரூ.500 கோடி முதலீடுகளை ஈர்த்த முதல்வர் மு.க ஸ்டாலின்.. அமெரிக்க பயணத்தில் அடுத்தடுத்து அசத்தல் அறிவிப்புகள்.!
அமைதி பேச்சுவார்த்தை: இந்நிலையில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா (பிரிக்ஸ்) நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் (National Security Adviser Ajit Doval) சென்றிருந்தார். இந்த கூட்டத்துக்கு இடையே ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் செர்கே சோய்குவை, அஜித் தோவல் சந்தித்து போர் நிறுத்தம் (Ukraine Peace Plan) குறித்துப் பேசினார். அதன்பின் ரஷ்ய அதிபர் புதினை (Russian President Vladimir Putin), அஜித் தோவல் சந்தித்து உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து பேசினார்.