3-Wheel Electric Car: 3-சக்கர எலக்ட்ரிக் வாகனம்... அப்போ இது ஆட்டோ இல்லையா..!

ஜென்சோல் குழுமம் சார்பில் 3-சக்கர எலக்ட்ரிக் கார் ஒன்று, இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டு உள்ளது.

3-Wheel Electric Car (Photo Credit: @IndiaCarNews X)

ஜனவரி 08, புதுடெல்லி (New Delhi): சூரிய ஒளியில் இயங்கும் சாதனங்களை உற்பத்தி செய்து வரும் ஜென்சோல் க்ரூப் (Gensol Group), தற்போது எலக்ட்ரிக் கார் வணிகத்திலும் இறங்க உள்ளது. இதனால் 3-சக்கர வாகனத்தை எலக்ட்ரிக்கில் கொண்டுவர ஜென்சோல் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த எலக்ட்ரிக் வாகனம் தொடர்பான டீசர் கடந்த டிசம்பர் மாதத்தில் இணையத்தில் வெளியிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வாகனத்தின் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று நிறுவனம் தரப்பில் இருந்து கூறுகின்றனர். Golden Globe Awards 2024: கோல்டன் குளோப் விருதுகள் 2024... யாருக்கு என்ன விருது?.. முழுப்பட்டியல் இதோ..!

3-சக்கர எலக்ட்ரிக் வாகனம்: ஜென்சோல் நிறுவனத்தின் தலைமையகமும் புனேவில்தான் அமைந்துள்ளது. அங்கு தான் ஜென்சோலின் புதிய 3-சக்கர எலக்ட்ரிக் வாகனத்தின் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 3 சக்கர வாகனங்களை நம் அனைவரும் பார்த்திருக்கிறோம். ஆட்டோக்கள் மற்றும் ரிக்‌ஷாக்கள் உள்ளிட்டவை 3 சக்கர வாகனங்களே. ஆனால் இந்த கார் சற்று வித்தியாசமானது. இந்த வாகனத்தில் முன்பக்கத்தில் இரு சக்கரங்களும், பின்பக்கத்தில் ஒரு சக்கரமும் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் வாகனத்திற்கு உள்ளே 4 பேர் அமர்ந்து செல்லலாம் என்றும், அதேநேரம் பூட் ஸ்பேஸும் விசாலமானதாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif