X Platform 2.0 Limited Edition: மணிக்கு 72கிமீ வேகத்தில் பயணிக்கும் இஸ்கூட்டர்.. எக்ஸ் பிளாட்ஃபார்ம் 2.0 லிமிடெட்ட எடிசன் வெளியீடு..!
ப்யூர் இவி நிறுவனம், எக்ஸ் பிளாட்ஃபார்ம் 2.0 லிமிடெட்ட எடிசன் எனும் சிறப்பு பதிப்பை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.
பிப்ரவரி 08, புதுடெல்லி (New Delhi): இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனம் ப்யூர் இவி (Pure EV). இந்த நிறுவனம் எக்ஸ் பிளாட்ஃபார்ம் 2.0 லிமிடெட்ட எடிசன் (X Platform 2.0 Limited Edition) எனும் சிறப்பு பதிப்பை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த இ-ப்ளூட்டோவின் அனைத்து சீரிஸ்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.
சிறப்பம்சங்கள்: எக்ஸ் பிளாட்பாரம் 2.0 லிமிடெட் எடிசனில் விற்பனைக்கு வந்திருக்கும் அனைத்து மாடல்களும் நிறுவனத்தின் எக்ஸ் பிளாட்பாரத்தில் வைத்தே தயாரிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த பதிப்பில் ஈகோ மோட்டிலும் ரைடர்களால் அதிகபட்ச வேகத்தை எட்ட முடியும். மணிக்கு 58 கிமீ வேகம் வரை எட்ட முடியும். மேலும், அடிக்கடி மோடை மாற்றி மாற்றி இயக்க வேண்டும் என்கிற சூழலையும் இந்த சிறப்பு வசதியால் ப்யூர் இவி தற்போது நீக்கி இருக்கின்றது. இந்த மோட் வாயிலாக அதிகபட்சமாக மணிக்கு 72 கிமீ வேகம் வரை பயணிக்க முடியும். Monkey Fever: திடீரென பரவும் குரங்கு காய்ச்சல்... கர்நாடகாவில் மேலும் இருவருக்கு பாதிப்பு..!
விலை: இப்ளூட்டோ 7ஜி ப்ரோ அதிகபட்சமாக 131-171 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும். இப்ளூட்டோ 7ஜியில் 2.5 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ. 89,999 ஆகும். 7ஜி ப்ரோக்கு ரூ. 99,999ம், 7ஜி மேக்ஸிற்கு ரூ. 1.14 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரும் விலை மட்டுமே ஆகும்.