Pamban Railway Bridge: பாம்பன் புதிய பாலம்.. ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி..!
ராமேஸ்வரம் பாம்பன் தூக்கு பாலத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டமானது மேற்கொள்ளப்பட்டது.
ஆகஸ்ட் 06, ராமேஸ்வரம் (Ramanathapuram News): ராமநாதபுரம் மாவட்டத்தையும் ராமேஸ்வரம் தீவையும் (Rameshwaram) தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கு பாம்பன் சாலை மற்றும் ரயில் பாலம் (Pamban Bridge) முக்கிய பங்காற்றி வருகிறது. பாம்பன் பழைய ரயில் பாலத்தின் மையப் பகுதியில் உள்ள ரயில் தூக்குப்பாலம் உறுதித் தன்மை இழந்ததால், அந்த ரயில் பாலம் அருகே கடலில் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய ரயில் பாலம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலத்துக்காக பாம்பன் கடலில் 333 தூண்கள் அமைக்கப்பட்டன. அதன் மீது இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணிகள் முழுமையாக முடிந்தன. TVS Ronin Parakram: டிவிஎஸ் நிறுவனத்தின் ரோனின் பராக்ரம்.. சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?!
புதிய பாம்பன் ரயில் பாலம்: இந்த புதிய பாம்பன் ரயில் பாலம் 2.08 கிலோமீட்டர் தூரத்திற்கு, சுமார் 238 அடி மட்டும் லிப்ட் போன்ற தூக்குபாலமாக அமைக்கப்படுகிறது. இது சுமார் 550 டன் எடை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இரும்பு தூக்கு பாலத்தில் தண்டவாளம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், முதல் முறையாக அந்த பாலம் வழியாக ரயில் எஞ்சினை இயக்கி ரயில்வே துறையினர் சோதனை மேற்கொண்டனர். ஆய்வு என்ஜின், கடல் பாலத்தில் முழுமையாக பயணித்து, பாம்பன் ரெயில் நிலையத்தை அடைந்தது. மேலும், நாளை (ஆகஸ்ட் 7) சரக்கு ரயிலை பாம்பன் புதிய ரயில் பாலத்தில் முழுமையாக இயக்கி சோதனை நடத்த இருப்பதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனை வெற்றிகரமாக முடிந்ததால் விரைவில் பாம்பன் பாலத்தில் ரயில் சேவை தொடங்கும்.