XPENG's Futuristic Modular Flying Car: இனி சீனாவில் காரை ரோட்டில் மட்டுமில்லை.. அதுக்கு மேலேயும் ஓட்டலாம்.. பறக்கும் காருக்கு அனுமதி..!

சீனாவை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று தன்னுடைய பறக்கும் எலெக்ட்ரிக் காருக்கான டிசைனுக்கு அனுமதி கிடைத்திருப்பதாக அறிவித்து இருக்கின்றது.

Modular Flying Car (Photo Credit: @BassonBrain X)

மார்ச் 27, பெய்ஜிங் (China News): சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் எக்ஸ்பெங் (XPeng)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனமே தன்னுடைய பறக்கும் எலெக்ட்ரிக் காருக்கான (Flying Car) டிசைனுக்கு அனுமதி கிடைத்திருப்பதாக அறிவித்து இருக்கின்றது. இந்த பறக்கும் கார் எக்ஸ்3-எஃப் (X3-F) எனும் குறி பெயர் (Code Name)-இல் அறியப்படுகின்றது. இது விற்பனைக்கு வரும்போது மாற்று பெயருடனேயே அறிமுகம் செய்யப்படும்.

இந்த ஒரே வாகனம் பறக்கும் கார் மற்றும் சாலையில் ஓடும் கார் என இரண்டாகவும் செயல்படும் என்பது தெரிய வந்திருக்கின்றது. அதேவேளையில், பறப்பதற்கான யூனிட் தனியாக இந்த காரில் வழங்கப்பட உள்ளது. அதில் ஓரே நேரத்தில் இரண்டு பேர் பறக்க முடியும். இதனால் செங்குத்தாக பறத்தல் மற்றும் லேண்டிங் ஆகியவற்றை செய்துக்கொள்ள முடியும். எனவே இது பறப்பதற்கு ஓடு தளம் தேவைப்படாது. Mega Millions Jackpot Result 2024: மெகா மில்லியன் ஜாக்பாட்... 100 கோடி 100 கோடி வின்னர் நீ..!

2025 ஆம் ஆண்டிற்குள் இதன் உற்பத்தி பணிகள் தொடங்கிவிடும் என கூறப்படுகின்றது. தற்போது இந்த வாகனத்தை பறக்கும் வாகனம் என்பதற்கான சான்றை சீனாவின் சிவில் ஏவியேஷன் நிர்வாகம் (Civil Aviation Administration of China) வழங்கி இருக்கின்றது.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif