Singer Mangli Satyavathi Rathod: கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.!

தெலுங்கில் முன்னணி திரைபிரபலமாக இருந்து வரும் நடிகை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது கார் விபத்தில் சிக்கினார்.

Satyavathi Rathod Actress (Photo Credit: @TeluguScribe X)

மார்ச் 18, ஹைதராபாத் (Cinema News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பிரபல நடிகை, பின்னணி பாடகி என பன்முகத்தன்மை கொண்டவர் மங்கிலி என்ற சத்தியவதி ரத்தோட (Mangli Alias Satyavathi Rathod). இவர் தெலுங்கு மொழியில் வெளியான பல்வேறு பாடலுக்கு தனது பின்னணி குரலை கொடுத்திருக்கிறார். Sabarmati-Agra Cantt Derail: பயணிகள் இரயில் தடம் புரண்டு பயங்கர விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்... பயணிகள் நிலை என்ன?..! 

'ஊ அண்டாவா'வுக்கு குரல் கொடுத்தவர்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செம்மர கடத்தல் தொடர்பான கதையம்சத்துடன் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தின் 'ஊ அண்டாவா' என்ற தெலுங்கு பாடலை இவரே பாடியிருந்தார். பன்முகத்தை கொண்ட திரைபிரபலமாக இருந்து வரும் சத்யவதி பின்னணி பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகை, அரசியல்வாதி, ஆலோசகர் என பன்முகத்துடன் செயல்பட்டு வருகிறார். ஒருசில படங்களில் நடிகையாகவும் வலம்வந்திருக்கிறார். NKorea Missile Launch: அமெரிக்காவுக்கு அதிர்ச்சித்தந்த வடகொரியா; முக்கியப்புள்ளி பயணத்தின்போதே ஏவுகணை சோதனை நடத்தி சர்ச்சை.! 

விபத்தில் சிக்கிய திரைபிரபலம்: இந்நிலையில், நடிகை சத்யவதி ரத்தோட் ஹைதராபாத்தில் இருந்து பெங்களுரு சாலையில் இன்று பயணம் செய்துகொண்டு இருந்தார். அச்சமயம் இவர் பயணித்த கார் ஹைதராபாத் தொண்டுப்பள்ளி பகுதியில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் நடிகை காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now