Train Derail Ajmer 18-March-2024 (Photo Credit: @ANI X)

மார்ச் 18, அஜ்மர் (Rajasthan News): இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மரில், இன்று அதிகாலை 01:04 மணியளவில் சபர்மதி - ஆக்ரா கேன்ட் பயணிகள் இரயில் வந்துகொண்டு இருந்தது. இரயில் மிதமான வேகத்தில் வரும்போதே, திடீரென இரயில் எஞ்சின் மற்றும் அதனை ஒட்டிய 4 பெட்டிகள் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளன. NKorea Missile Launch: அமெரிக்காவுக்கு அதிர்ச்சித்தந்த வடகொரியா; முக்கியப்புள்ளி பயணத்தின்போதே ஏவுகணை சோதனை நடத்தி சர்ச்சை.! 

பணிகளுக்கு காயம் இல்லை: இந்த விபத்து குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்படவே, அவ்வழியே வரும் பிற இரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. மீட்பு பணிகளும் துரிதமாக நடைபெற்றுள்ளன. நல்வாய்ப்பாக இரயில் விபத்தில் பயணிகள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. விபத்து குறித்து விசாரணை நடந்து வரும் வேலையில், இரயில் பாதையை சீரமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன. Vladimir Putin Victory on President Election: பேராதரவுடன் ரஷியாவின் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் விளாடிமிர் புதின்; இனி எல்லாம் அதிரடிதான்.! 

எதிர்காலத்தில் விபத்துகள் நடக்காமல் பார்த்துக்கொள்வதாக உறுதி: சபர்மதியில் இருந்து ஆக்ரா வரை செல்லும் பயல்கள் இரயில் 12548 விபத்தில் சிக்கியதாக இரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். எதிர்காலத்தில் இவ்வாறான விபத்துகள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறி இருக்கின்றனர்.