Chandra Mohan Rao: தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர் சந்திர மோகன் ராவ் காலமானார்; சோகத்தில் டோலிவுட்.!

80 வயதை கடந்த பிரபல தெலுங்கு நடிகர், வயது மூப்பு மற்றும் உடலநலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

Chandra Sekar Mohan Rao (Photo Credit: X)

நவம்பர் 11, ஹைதராபாத் (Cinema News): தெலுங்கு திரையுலகில் பழம்பெரும் நடிகராக இருந்து வந்தவர் சந்திர மோகன் (வயது 80). இவர் சமீபத்தில் வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக, ஹைதராபாத் அப்பலோ மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு இருந்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் பிரிந்ததைத்தொடர்ந்து, அவரின் மறைவு உறுதி செய்யப்பட்டுள்ளது. மல்லம்பள்ளி சந்திரசேகர மோகன் ராவ் என்ற இயற்பெயரை கொண்ட சந்திர மோகன் ராவ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வந்தார். Delhi Air Pollution: டெல்லியில் உச்சகட்ட மோசத்தில் காற்றுமாசு; மழையினால் லேசான இறக்கம் காண்பித்த பாதிப்பு.! 

கடந்த 1941ம் ஆண்டு பிறந்த சந்திர மோகன் ராவ், 25 வயதை கடந்து முதன் முதலில் தெலுங்கு திரையுலகில் 1966ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறார். அதனைத்தொடர்ந்து, பல படங்களில் அவர் நடித்துவிட்டார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வந்த சந்திர மோகன் ராவ், சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டுக்கு அடுத்தபடியாக அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. தனது குடும்பத்துடன் இறுதிக்கட்ட வாழ்க்கையை வாழ்ந்துவந்த ராவ், தனது 80 வயதில் உடல்நலக்கோளாறுகள் காரணமாக உயிரிழந்தார்.