IPL Auction 2025 Live

TV Actress Loss Against BJP Candidate: சொந்த தொகுதியில் பாஜக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு, 2292 வாக்குகளுடன் மண்ணைக்கவ்விய பிரபல சின்னத்திரை நடிகை.!

சொந்த தொகுதியில் முதல் முறையாக களம்கண்ட பிரபல தொலைக்காட்சி நடிகை, பாஜக வேட்பாளரிடம் தோல்வியை தழுவிய சம்பவம் நடந்துள்ளது.

TV Actress Chahat Pande Aam Aadmi Candidate form MP Damoh Constituency (Photo Credit: @JIX5A / @SamajWeekly X)

டிசம்பர் 06, இந்தூர் (Indore): கடந்த நவம்பர் 17ம் தேதி ஒரேகட்டமாக மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், டிசம்பர் 03ம் தேதி வெளியாகின. தேர்தல் முடிவுகளில் பெருவாரியான வெற்றியைப்பெற்ற பாஜக, மீண்டும் தனது ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது.

மீண்டும் பாஜக ஆட்சி: அம்மாநிலத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளும் களமிறங்கி மும்முனை போட்டி நடைபெற்ற நிலையில், இறுதியில் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்து, அக்கட்சியை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தினர். 163 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 66 தொகுதிகளில் வெற்றிகண்டுள்ளது.

சின்னத்திரை நடிகை: இந்நிலையில், தொலைக்காட்சி நடிகை பாஜக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு 2292 வாக்குகள் பெற்ற விஷயம் தெரியவந்துள்ளது. தனது 17 வயதில் சின்னத்திரையில் அறிமுகமாகி மத்திய பிரதேசம் மாநிலங்களில் பிரபலமான நடிகை நடிகை சாஸட் பாண்டே. இவர் ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு, அக்கட்சிக்காக உழைத்து வந்தார். Fake IT Raid: தொழிலதிபர் வீட்டில் போலி ஐடி ரெய்டு நடத்தி ரூ.18 இலட்சம் கொள்ளை: பணத்திற்கு ஆசைப்பட்டு சொந்த வீட்டில் கைவைத்த பேரன்.! 

சொந்த தொகுதியில் போட்டி: மத்திய பிரதேசம் சட்டப்பேரவை தேர்தலில், நடிகை பாண்டேவுக்கு அவரின் சொந்த தொகுதியான தாமு மாவட்டத்தில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவரை எதிர்த்து பாஜக சார்பில் ஜெயந்த் மலையா களம்கண்டு இருந்தார்.

தோல்வியை தழுவினார்: இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பாஜக வேட்பாளர் ஜெயந்த் மலையா 112278 வாக்குகள் பெற்று அமோக வெற்றி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நடிகை சாஸட் பாண்டே 2292 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

5 மாநில தேர்தல்கள்: வெவ்வேறு கட்டங்களாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம், சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தல்களில், காங்கிரஸ் தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றியது.

3 மாநிலங்களில் பாஜக ஆட்சி: மிசோராமில் 8 கட்சிகள் இணைந்து உருவாக்கப்பட்ட கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. எஞ்சிய மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. இவற்றில் சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் முன்னதாக காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.