Man Urinates Unconscious Man Face in UP (Photo Credit: @ZEEUPUK X)

நவம்பர் 06, அசம்கர் (Uttar Pradesh News): இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்திரப் பிரதேசத்தில் பல்வேறு குற்ற நிகழ்வுகள் தினந்தோறும் நடந்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் என்கவுண்டர் போன்ற செயல்களை அதிகம் மேற்கொண்டாலும், பலாத்காரம், கொலை, கொள்ளை போன்றவை தொடருகிறது. ஒருசில கோர விபத்துகளும் நடக்கின்றன. இதனிடையே, இளைஞர் ஒருவர் எந்த விதமான ஈவு இரக்கமின்றி செய்த செயல் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. இதுகுறித்த வீடியோ உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் அசம்கர் நகரில் எடுக்கப்பட்டுள்ளது. Train Accident: எக்ஸ்பிரஸ் இரயில் மோதி தூக்கி வீசப்பட்டு 4 பயணிகள் பலி.. தண்டவாளத்தை கடக்க முயன்றபோது சோகம்.! 

முகத்தில் சிறுநீர் கிழித்த கொடுமை:

சாலையோரம் மயங்கி கிடந்த நபர் ஒருவரின் முகத்தில் இளைஞர் சிறுநீர் கழிப்பது தொடர்பான காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ வைரலாகியதைத் தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வங்கி ஊழியரான சாஹில் குமார் என்ற நபரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மயக்க நிலையில் இருந்த நபரின் முகத்தில் சாஹில் சிறுநீர் கழித்த நிலையில், அவ்வழியாக சென்ற நபர் ஒருவர் இதனை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வங்கி ஊழியரின் அதிர்ச்சி செயல் தொடர்பான வீடியோ: