Actor Karthi: நடிகர் பவன் கல்யாணிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்திக்; காரணம் என்ன?.!
இந்தியாவையே அதிரவைத்த திருப்பதி லட்டு விவகாரத்தில், நடிகர் & ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம், தமிழ் நடிகர் கார்த்திக் மன்னிப்பு கோரினார்.
செப்டம்பர் 24, சென்னை (Cinema News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி, ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோவிலில் விநியோகம் செய்யப்படும் லட்டு தயாரிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் நெய்யில், விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதன்பேரில் நடந்த ஆய்விலும் நெய்யில் விலங்கு கொழுப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அம்மாநிலத்தில் முந்தைய ஆட்சியை வழிநடத்திய ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் அரசு மீது மிகப்பெரிய அளவில் அதிருப்தி எழுந்தது. Mohan G: பழனி பஞ்சாமிருதம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து: திரௌபதி, பகாசூரன் இயக்குனர் மோகன் ஜி கைது?..
பவன் கல்யாண் விரதம்:
முந்தைய ஆட்சியில் இவ்வாறான செயல்கள் நடந்ததாக, அம்மாநிலத்தின் தற்பதையே முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளிப்படகையாக கண்டனத்தை தெரிவித்து இருந்தார். இதனால் திண்டுக்கல்லில் இருந்து திருப்பதிக்கு நெய் விநியோகம் செய்து வந்த ஏ.ஆர். டைரி நிறுவனமும் சர்ச்சையில் சிக்கி, அதன் தயாரிப்புகளும் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வரான பவன் கல்யாண், விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டு வந்த கோவில் வளாகத்தில் மேற்கொள்ளப்படும் சிறப்பு பூஜைக்காக விரதமும் மேற்கொண்டு வருகிறார்.
சர்ச்சையாகும் கருத்துக்கள்:
திருப்பதி கோவிலில் நடந்த விஷயம் தொடர்பாக அதிருப்தியடைந்த தீட்சகர்களும், கோவில் வளாகத்தில் சிறப்பு பூஜை நடத்தவும் ஏற்பாடுகள் செய்து அதற்கான பணியை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட செயல்பாடுகளாக கோவில் வளாகத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனிடையே, நடிகர் பிரகாஷ் ராஜ் நெய் விவகாரம் குறித்து கருத்து ஒன்றை முன்வைத்தார். அது ஆந்திர அரசியலில் சலசலப்பை உண்டாக்கியது. இதனால் ஆவேசமடைந்த நடிகர் பவன் கல்யாண், திருப்பதி லட்டு விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என கூறி இருந்தார்.
மன்னிப்பு கோரினார்:
இந்நிலையில், நடிகர் கார்த்திக் தனது எக்ஸ் பதிவில், "அன்புள்ள பவன்கல்யாண் அவர்களுக்கு.. ஆழ்ந்த மரியாதையோடு, எதிர்பாராத தவறான புரிதலுக்கு நான் மன்னிப்பு கோருகிறேன். வெங்கடேசப் பெருமானின் ஆளுமையான பக்தன் என்ற முறையில், நமது மரபுகளை அன்புடன் நடத்துகிறேன். வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து, மன்னிப்பு கேட்டு நடிகர் கார்த்திக்கின் எக்ஸ் வலைப்பதிவு: