செப்டம்பர் 24, காசிமேடு (Cinema News): பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய திரைப்படங்களை இயக்கி வழங்கிய இயக்குனர் மோகன் ஜி (Mohan G). இவர் தன்னை சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக வைத்திருப்பவர் ஆவார். இவரின் கருத்துக்களுக்கு ஆதரவும், எதிர்ப்பும் என எப்போதும் மோகனின் சமூக வலைதளபக்கங்கள் கருத்து மோதலால் களைகட்டும். இதனிடையே, வலதுசாரி ஆதரவு சிந்தனை கொண்ட மோகன் ஜி, சமீபத்தில் திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலந்து தொடர்பாக கருத்து தெரிவித்து இருந்தார். மேலும், பழனி பஞ்சாமிருதத்தில் சர்ச்சைக்குரிய பொருள் ஒன்று இருப்பதாகவும் பேசி இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிர்ச்சி காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. IT Parks: தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா; ஐடி ஊழியர்களின் வேலைவாய்ப்பு; தமிழ்நாடு முதல்வர் அசத்தல்.!
மோகன் ஜி விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார்:
ஏற்கனவே அமைச்சர் சேகர் பாபு பழனியில் பஞ்சாமிருதத்திற்கு ஆவின் நெய் மட்டுமே கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினால், உரிய சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என எச்சரிக்கை விடுத்து இருந்தார். இதனிடையே, மோகன் ஜியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பழனியில் காவல் நிலையத்தில் புகார்களும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று காலை மோகன் ஜியின் காசிமேடு வீட்டிற்கு நேரில் சென்ற காவல் துறையினர், அவரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர் என அவரின் மனைவி தகவல் தெரிவித்துள்ளார். அவர் எதற்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார்? என்ற விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
சர்ச்சைக்குரிய வகையில் மோகன் ஜி பேசக்கூடிய காணொளி: