Pooja Hedge with Saree: மஞ்சள் நிற சேலையில் மாஸ் காண்பித்த பூஜா ஹெட்ஜ்; அசத்தல் கிளிக்ஸ் உள்ளே.!
தமிழில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தொடர்ந்து ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் நடிகை சேலையில் அசத்தல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
பிப்ரவரி 19, சென்னை (Cinema News): தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியான திரைப்படங்களில் நடித்து வரவேற்பு பெற்ற நடிகை பூஜா ஹெட்ஜ் (Pooja Hedge). மாடல் அழகியான இவர், கடந்த 2010ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றார். கடந்த 2012ம் ஆண்டு தமிழில் வெளியான மிஷ்கினின் முகமூடி திரைப்படத்தின் வாயிலாக இவர் திரையுலகுக்கு அறிமுகமானார்.
முகமூடிக்கு பின் பீஸ்ட்: முகமூடி திரைப்படம் அதீத எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி வெற்றியை அடையவில்லை எனினும், அதனைத்தொடர்ந்து 2014ல் தெலுங்கு மொழியில் வெளியான ஒக லைலா கோசம் படத்தில் நடித்து தெலுங்கிலும் அறிமுகமானார். ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளும் பூஜா ஹெட்ஜ்க்கு தெரியும். 2012க்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின், கடந்த 2022ம் ஆண்டு வெளியான நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். Tribal Group Violence: பழங்குடியினருக்கு இடையே பயங்கர மோதல்; இருதரப்பு மோதலில் 64 பேர் பலி..!
சேலையில் வீடுகட்டிய நடிகை: இப்படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. நடப்பு ஆண்டில் ஹிந்தியில் உருவாகி வரும் தேவா என்ற படத்தில் நடித்து வருகிறார். விரைவில் மீண்டும் இவர் தமிழில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளபக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூஜா, தற்போது சேலையில் தனது அழகிய புகைப்படங்கள் தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
கவனிக்கத்தக்க விருதுகளை பெற்ற நடிகை: எப்போதும் கிளாமரான போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் நடிகை பூஜா ஹெட்ஜ், சேலையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளது அவர் விரைவில் தமிழ் படத்தில் நடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்புகள் விரைந்து வெளியாகலாம். திரைக்கு வந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் பூஜா ஹெட்ஜ் ஜீ தெலுங்கு அவார்ட்ஸ், சைமா அவார்ட்ஸ் உட்பட பல கவனிக்கத்தக்க விருதுகளையும் பெற்றுள்ளார்.