AR Rahman Latest: "தமிழ் ல பேசும்மா" மனைவியை அன்புடன் கண்டித்த ஏ.ஆர். ரஹ்மான்.. காதல் பாடல்கள் குவிய இதுவும் காரணமா?..!

இளையராஜாவின் பட்டறையில் இசையை பயின்று தமிழ் மீது தீரா காதல் கொண்ட ஏ.ஆர். ரஹ்மான், பல்வேறு இடங்களில் தமிழை முன்னிறுத்தி பேசி இருக்கிறார். தன்னை தமிழர் என்பதை வெளிப்படையாக அடையாளப்படுத்திக்கொண்டுள்ளார்.

A.R Rahman & Wife Saira Banu (Photo Credit: Twitter)

ஏப்ரல் 27, சென்னை (Cinema News): மொழிகளை கடந்து மனங்களை வெல்லும் வல்லமை கொண்ட இசை உலகில், இசைப்புயல் என்ற பெருமை கொண்டவர் ஏ.ஆர் ரஹ்மான் (A.R Rahman). இவர் ஆஸ்கர் (Oscar), பத்ம பூஷன் (Padma Bhushan), பத்ம விபூஷண் (Padma Vibhushan), கிராமி உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

இவரின் மனைவி சாயிரா பானு (Saira Banu). தம்பதிகளுக்கு கதிஜா ரஹ்மான், ரஹீமா ரஹ்மான், ஏ.ஆர் அமீன் ஆகிய 3 குழந்தைகள் இருக்கின்றனர். தமிழ் மீது பற்றுக்கொண்ட ஏ.ஆர் ரஹ்மான், இளையராஜாவின் இசைப்பட்டறையில் இருந்து ஒலிக்க தொடங்கிய இசைக்கருவி ஆவார். Indian Army Zindabad, PM Modi Zindabad: “மோடி ஜிந்தாபாத், இந்தியன் ஆர்மி ஜிந்தாபாத்” – சூடானில் இருந்து தாயகம் திரும்பிய இந்தியர்கள் உற்சாகம்.! பிரதமருக்கு மனமார்ந்த நன்றி..!

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சினிமா விகடன் நிகழ்வில் மனைவியுடன் ஏ.ஆர் ரஹ்மான் கலந்துகொண்டார். அப்போது, அவர் பேசுகையில் மனைவி என் மீது தீராத காதல் கொண்டவர். அவர் என் குரலை எப்போதும் கேட்டுக்கொண்டு இருப்பார் என்று கூறினார்.

அதனைத்தொடர்ந்து மனைவி சாயிரா பானுவை பேச சொல்லி தொகுப்பாளர் சொல்ல, அவருக்கு தெளிவாக தமிழ் பேச தெரியாது என்பதால், எனக்கு தமிழ் தெளிவாக பேச தெரியாது. என்னை மன்னியுங்கள். எனக்கு மிகவும் பிடித்த குரல் அவருடையது தான். அவரின் குரல் மீது நான் காதல் வயப்பட்டு இருக்கிறேன்" என பேசினார்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement