Jawan on Burj Khalifa: புர்ஜ் கலீபாவை தெறிக்கவிட்ட ஷாருக்கானின் ஜவான் திரைப்பட டிரைலர்; கொண்டாட்டத்தில் ஷாருக் ரசிகர்கள்.!
வாழ்க்கையில் பல கஷ்டங்களை கடந்து இன்று இந்திய திரையுலகுக்கு அடையாளமாக திகழும் முக்கிய நடிகர்களில் ஒருவரான ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் செப்டம்பர் மாதம் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
செப்டம்பர் 01, துபாய் (Cinema News): ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, சன்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகிபாபு, சுனில், சஞ்சய் தத், ரியாஸ் கான், அமிர்தா ஐயர் உட்பட பலர் நடித்து செப் 10-ல் திரைக்கு வரவுள்ள திரைப்படம் ஜவான்.
அட்லீ இயக்கத்தில், அனிரூத் இசையில், ரெட் சில்லிஸ் என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பில் திரைப்படம் உருவாகி இருக்கிறது. படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உலகளவில் வெளியாகிறது. Austin Gun Fire: அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம்.. வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிசூட்டில் 2 பேர் பரிதாப பலி.!
இப்படம் வெளியீடுக்கு முன்பாகவே டிஜிட்டல் உரிமை மற்றும் ஒளிபரப்பு உரிமை என இலாபத்தை அள்ளிக்குவித்துள்ளது. இதனால் படத்தின் வெளியீட்டுக்கு பின்பு மிகப்பெரிய அளவில் திரைப்படம் வசூல் ரீதியாக கொண்டாடப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
முன்னதாகவே இப்படத்தின் முன்னோட்ட காட்சிகள், பாடல்கள் அனைத்தும் வெளியாகி வைரலாகின. இந்நிலையில், படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. அட்டகாசமான வரவேற்பை பெற்றுள்ள டிரைலர், துபாயில் இருக்கும் புர்ஜ் கலீபா மீதும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன் வீடியோ வெளியாகி இருக்கிறது.