Chikitu Vibe: ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்.. டி. ராஜேந்தர் குரலில் மாஸ் பாடல்.. Chikitu Vibe கிலிம்ப்ஸ் வீடியோ வைரல்..!

ரஜினி ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் கூலி திரைப்படத்தில், சிக்கிட்டு வைப் பாடல் கிலிம்ப்ஸ் வீடியோ, இன்று 12 டிசம்பர் 2024 ரஜினியின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

Chikitu Vibe (Photo Credit: YouTube)

டிசம்பர் 12, கோடம்பாக்கம் (Cinema News): மாநகரம், கைதி, மாஸ்டர், லியோ என அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj), தற்போது இந்தியத் திரையுலகின் அடையாளம் மற்றும் தமிழ்த் திரையுலகின் சூப்பர்ஸ்டார் என வருணிக்கப்படும் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) நடிப்பில் உருவாகி வரும் கூலி (Coolie) திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

தலைவர் 171 திரைப்படம்:

சன் பிக்சர்ஸ் தயாரித்து வழங்கும் கூலி திரைப்படத்திற்கு அனிரூத் (Anirudh) இசையமைக்கிறார். கூலி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் சாஹிர், சுருதி ஹாசன், ரேபா மோனிகா உட்பட பலரும் நடித்து வருகின்றனர். அமீர் கான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கலாம் என தெரியவருகிறது. ரஜினிகாந்த்தின் 171 (Thalaivar 171) வது திரைப்படமான கூலி, மிகப்பெரிய அளவில் வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. HBD Super Star: "நெருப்புப் பேரோட.. நீ கொடுத்த ஸ்டாரோட.. இன்னைக்கும்.. ராஜா நான்.." தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் இன்று.. 

சிக்கிட்டு வைப் பாடல்:

இந்நிலையில், சிக்கிட்டு வைப் (Chikitu Vibe) பாடலின் கிலிம்ப்ஸ் வீடியோ சன் பிக்சர்ஸ் (Sun Pictures) நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கூலி திரைப்படத்தில் இடக்கம்பெற்றுள்ள சிக்கிட்டு வைப் பாடலை அறிவு எழுதி வழங்கி இருக்கிறார். விஜய டி.ராஜேந்தர் (T Rajendar), அறிவு, அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் குரலில், அனிரூத் இசையில் பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

விஜய டி ராஜேந்திரன் குரல்:

முன்னதாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருந்த கவண் திரைப்படத்தில், பன்முகத்தன்மை கொண்ட நடிகர் விஜய டி. ராஜேந்தர், "ஹேப்பி ஹேப்பி நியூ இயரு" என்ற பாடலை பாடி இருந்தார். இந்த பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றியை தந்தது. படத்துக்கும் உறுதுணையாக இருந்தது. இதனிடையே, தற்போது மீண்டும் ராஜேந்தரின் குரலில் பாடல் கேட்க ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிக்கிட்டு வைப் பாடல் உங்களின் பார்வைக்கு.. கேட்டு மகிழ இங்கு அழுத்தவும்:

"தேவா வர்றார் சவுண்ட யேத்து" - சிக்கிட்டு பாடல் கிலிம்ப்ஸ்: