Actor Vimal Speech: "கைகொடுத்தாலும் யாருக்குக் கொடுக்கணும். யாருக்கு கை கொடுக்கக்கூடாதுன்னு தெரிஞ்சு கைகொடுக்கணும்" - நடிகர் விமல்..!

விஜய்சேதுபதி நடிகராவதற்கு முன்பே எனக்கு நடிக்க வாய்ப்பு வாங்கி தந்தவர் என சார் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசியிருக்கிறார் நடிகர் விமல்.

Vimal (Photo Credit: YouTube)

செப்டம்பர் 19, சென்னை (Cinema News): சார் படத்தில் நடிகர் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தினை நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே, கன்னி மாடம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தினை இயக்குநர் வெற்றி மாறன் தயாரித்துள்ளார். இப்படத்தில் சாயா கண்ணன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சரவணன், விஜய் முருகன், ஜெயபாலன், ராமா உள்ளிட்ட சிலர் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.‌ இந்த விழாவில் விமல் உள்ளிட்ட படக்குழுவினர் உடன் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொண்டார்.

சார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விமல் பேசியதாவது, ‘’வெற்றிமாறன் சார். அவர் தான் ‘சார்’ படத்துக்கு சார். வெற்றிமாறன்னு போட்டதால் தான் அது சார்ன்னே வெளியில் தெரியுது. இல்லைன்னா சார் என்ன சார், (மெதுவான குரலில் மிமிக் செய்கிறார்), சார் அப்படிங்கிற உரத்த குரல் நம்ம அண்ணே வெற்றிமாறன் மூலமாகத்தான் வந்திருக்கு. அதனால், அவருக்கு ஒரு நன்றியை சொல்லிக்கிறேன்.அதேமாதிரி இப்படி வந்து உரக்கப்பேசுடா. உற்சாகமாகப் பேசுடா அப்படி தூண்டிவிட்டுட்டு இருக்கிற நண்பர் விஜய்சேதுபதி அவர்கள். கூத்துப்பட்டறையில் இருக்கும்போது என் நாடகத்தை இப்படியே உட்கார்ந்துட்டு பார்ப்பார். டேய் மினி சூப்பரா பண்ணுனடா, நல்லாப் பண்ணியிருக்கடா என்று அன்னைக்கு உற்சாகப்படுத்தினார். இன்னவரைக்கும் உற்சாகப்படுத்திட்டு இருக்கார். Kanguva: நவம்பர் 14 அன்று கங்குவா திரைப்படம் வெளியீடு; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

அவரும் சரி, வெற்றிமாறன் அண்ணனும் சரி. கைகொடுத்து தூக்கிவிடணும்னு நினைக்கக்கூடிய ஆட்கள். அப்படி அவங்களும் நிறையபேருக்கு கை கொடுத்து தூக்கிவிட்டுட்டு இருக்காங்க. வெற்றிமாறன் அண்ணன் மாதிரியும் விஜய்சேதுபதி மாதிரியும் நானும் சிலருக்கு தூக்கிவிட கைகொடுத்தேன். பார்த்தால், ஏன் காலப்பிடிச்சு வாரிவிட்டாங்கே. அதனால, கைகொடுத்தாலும் யாருக்குக் கொடுக்கணும். யாருக்கு கை கொடுக்கக்கூடாதுன்னு தெரிஞ்சு கைகொடுக்கணும். அதில் வந்து அண்ணன் வந்து கரெக்டா கொடுத்துட்டு இருக்காங்க. நல்லா நடிச்சிட்டு, அப்படியே கீழே வந்து, காலப்பிடிச்சு இழுத்துவிட்டாங்கல்ல, அப்ப கீழே விழுந்தேன். அப்ப திருப்பி அரவணைச்சு, தூக்கிவிட்டதில் விஜய்சேதுபதிக்கு பெரும்பங்கு இருக்கு.

எனக்கு போன் அடிப்பார். சொல்லுங்க அப்படின்பேன். டேய் ஏன்ட்டா, உனக்கு போன் அடிச்சால் நான் டயர்டா ஆகிடுறேன் அப்படியின்பார். நல்லதோ கெட்டதோ உற்சாகமாக உரக்கப்பேசு. நாலுபேருக்குப் புரியுற மாதிரிபேசு. மகிழ்ச்சி படுத்து, இல்லைன்னா கோபப்படுத்து. அதைவிட்டுட்டு உன் பேச்சைக் கேட்ட டயர்டு ஆகி உட்கார்ந்துடக்கூடாதுன்னு சொல்லி உற்சாகப்படுத்தி உற்சாகப்படுத்தி, இப்போது எல்லாம் பார்த்தீங்கன்னா 10 விநாடி பேசினதுபோய், ஒரு நிமிஷம் இரண்டு நிமிஷம் பேசிறேன். அதற்குக் காரணம் விஜய்சேதுபதி தான்.

நான் தொங்கி இருக்கும்போது எல்லாம் விஜய்சேதுபதிகிட்ட பேசி சார்ஜ் ஏத்திக்குவேன். எவ்வளவு உயரத்துக்குப்போனாலும், அவர் கொடுக்குற கையை இன்னவரைக்கும் கொடுத்துட்டே இருக்கார். அவருக்கு வந்து ரொம்ப நன்றி சொல்லிக்கிறேன். அவர் கூட படம் பண்ணனும் ஆசையா இருக்கு. மஹாராஜாவில் போட்டு அடி நொறுக்கிவிட்டார். மஹாராஜா படத்தில் அவர் கேரக்டர் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது.கிளைமேக்ஸில் வைச்சார் பாருங்க ஒரு டிவிஸ்ட். அவர் ஹீரோவாகி போயிட்டார். அருமையா பண்ணியிருந்தார். மஹாராஜா டீமுக்கு வாழ்த்துகள். CID Sakunthala Passes Away: பழம்பெரும் நடிகை ‘சி.ஐ.டி சகுந்தலா’ மறைவு.. திரைத்துறையினர் இரங்கல்.!

அம்மா கிரியேஷன் சிவா அண்ணன், என்னோட நெருக்கடியான காலகட்டங்களில் கூட இருந்திருக்கார். அதுக்கு ரொம்ப நன்றி அண்ணே. அதேமாதிரி தனஞ்ஜெயன் அண்ணே, கலகலப்பு முதல் இன்னைக்குவரைக்கும் அவர் நட்பு தொடருது. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கணும். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் எந்தவொரு புகார் வந்தாலும், சின்னதாக நம்மை கொஞ்சம் சீர்தூக்கிப் பாருங்க. இந்த மேடை இவ்வளவு நிறைவாக, ஒரு நல்ல நிகழ்ச்சியாக நடக்குது என்றால், முக்கியமாக இந்த இரண்டு ஜீவன்கள் தான் காரணம். அண்ணன் வெற்றிமாறன் அண்ணனும், விஜய்சேதுபதி அவர்களும், அதற்கு உறுதுணையாக நட்டி அண்ணனும் தான்.

அதே மாதிரி கவிஞர் விவேகா அண்ணனுடைய பாடல்கள் பனங்கருக்க என்னும் பாடலும், படிச்சிக்குறோம் படிச்சிக்குறோம் அப்படிங்கிற பாடலும் நன்கு அருமையாக எழுதியிருக்காங்க. அடுத்து இளையராஜா அவர்கள் எழுதி, பாடி, இசையமைத்து ஆடியிருக்கார். இப்படத்தின் கதாநாயகி சாயா தேவி அவர்களுக்கும் இப்படத்தில் அப்பாவாக நடித்த சரவணன் அண்ணன் அவர்களுக்கு நன்றிகள். சரவணன் அண்ணன் சித்தப்பாவாக நடிச்சி பார்த்திருப்பீங்க. இந்தப் படத்தில் சித்தப்பாவில் இருந்து அப்பாவாகியிருக்கார். ரொம்ப அருமையாக பண்ணியிருக்கார்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சிராஜ் அவர்கள், இந்த மாதிரி படத்துக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பது கடினம். சமீபத்தில் நான் பண்ணின ‘போகும் இடம்வெகுதூரம் இல்லை’ படத்தை, ஊடகங்கள் எல்லோரும் பாராட்டுனீங்க. மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தீங்க. அந்த மாதிரி படம் எடுக்கிறதுக்கு எல்லாம், ஒரு தயாரிப்பாளர் கிடைக்கிறது ரொம்ப அபூர்வமாக இருக்கு. ’சார்’ படத்தில் 1980களில் இருக்கும் காட்சிகளுக்கு, ஸ்கூலை இடிக்கிற மாதிரி சீனுக்கு எல்லாம், தயாரிப்பாளர் சிராஜ் அவர்கள் செட் அமைக்க நன்றாக உதவினார். அவர்களுடைய மனைவி சகோதரி அவர்களுக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதே மாதிரி படத்தின் கோ புரொடியூசர் கண்ணன் அவர்களும் ரொம்ப சப்போர்ட் பண்ணுனாங்க. படத்தின் விழா நாயகன் சித்து குமாரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் அருமையாக வந்திருக்கு. கண்டிப்பாக நல்ல படமாக இருக்கும். இந்தப் படத்தை எல்லோரிடமும் கொண்டுபோய் சேர்த்துக்கொடுங்க’’ என நடிகர் விமல், சார் படத்தின் இசைவெளியீட்டுவிழாவில் பேசிமுடித்தார்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now