Aditi Rao Hydari Marries Siddharth: அதிதி ராவ்-சித்தார்த் திருமணம்.. வைரலாகும் புகைபடங்கள்..!
பிரபல நடிகை அதிதி ராவிற்கும், சித்தார்த்திற்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
செப்டம்பர் 16, சென்னை (Cinema News): `பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பல ஹிட் படங்களில் நடித்தவர் நடிகர் சித்தார்த். அதேபோல 'காற்று வெளியிடை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி 'செக்க சிவந்த வானம்', 'ஹே சினாமிகா' போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானவர் அதிதி ராவ். 2021-ம் ஆண்டு ‘மகா சமுத்திரம்’ என்ற படத்தில் இணைந்து நடித்த சித்தார்த் மற்றும் அதிதி ராவ் காதலித்து, ஒன்றாக வாழ்ந்தும் வந்தார்கள். இவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபுரம், ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோயிலில் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. Ajith Kumar Buys Porsche 911 GT3: புதிய சொகுசு காரை வாங்கிய அஜித்குமார்.. விலை எவ்வளவு தெரியுமா?!
அதிதி ராவ்-சித்தார்த் திருமணம்: இதனிடையே சித்தார்த் - அதிதி ராவ் திருமணம் இரண்டு குடும்பத்தினர் சூழ நடைபெற்று இருக்கிறது. சிம்பிளாக நடந்த இந்த திருமணத்தில், சிலரே கலந்து கொண்டிருக்கின்றனர். 'நீ என் சூரியன், என் சந்திரன் மற்றும் என் நட்சத்திரம்' என்று பதிவிட்டு திருணப்புகைப்படங்களை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றனர். இவர்களுக்கு பல்வேறு பிரபலங்கள் திருமண வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இவர்களின் போட்டோக்கள் இப்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
சித்தார்த் -அதிதி ராவ் திருமணப் புகைப்படங்கள்:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)