செப்டம்பர் 13, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் (Ajith Kumar), மகிழ் திருமேனி (Magizh Thirumeni) இயக்கத்தில் விடாமுயற்சி (Vidaa Muyarchi) என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசான்ட்ரா, உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

குட் பேட் அக்லி: இந்த படத்திற்கு பின், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், குட் பேட் அக்லி (Good Bad Ugly) படத்தில் இணைந்துள்ளார். இதன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றதுடன், படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஹைதராபாத்தில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தின் செகண்ட் லுக்கை படக்குழு வெளியிட்டது. மேலும், இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Thalapathy 69: "என் பிள்ளை தளபதிய பார்க்கணும் சொன்னா என்ன செய்வேன்?" சோகத்தில் கதறும் ரசிகர்கள்..!

காரை வாங்கிய அஜித்குமார்: சினிமா தவிர்த்து அஜித் குமார் பைக்கில் தனது குழுவுடன் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் அஜித் துபாயில் ரூ.9 கோடி மதிப்புள்ள சிவப்பு நிற ஃபெராரி கார் ஒன்றை வாங்கினார். ஏற்கனவே தனது வீட்டில் ஏற்கனவே ரூ.34 கோடி மதிப்புள்ள லம்போர்கினி, லேண்ட் ரோவர் டிஸ்கவரி, மெர்சிடஸ் பென்ஸ் உள்ளிட்ட 6 சொகுசு கார்கள் உள்ள நிலையில், தற்பொழுது, ₹4 கோடி மதிப்புள்ள போர்ஸ்சே ஜிடி3 ஆர்எஸ்ஸை (Porsche GT3 RS) வாங்கியுள்ளார்.

Porsche GT3 RS கார் வாங்கிய அஜித்:

 

View this post on Instagram

 

A post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022)